விநாயகர் ஊர்வலம்காவல்துறைக்கு கழகம் நேரில் மனு
விநாயகன் அரசியல் ஊர்வலங்களில் சட்டமீறல் விதிமுறைகளை அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறிந்து பறிமுதல் செய்யவேண்டும்; சட்டவிரோதமாக ஒலி பெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன், பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். ஆனைமலை : பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும்...