மதவாத ஆட்சிகள் பாடம் பெறுமா? பிரிட்டன் விலகியது; ஸ்காட்லாந்து விலகப் போகிறது
28 நாடுகளைக் கொண்டு 43 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது அய்ரோப்பிய ஒன்றியம். அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து இப்போது பிரிட்டன் விலகிவிட்டது. வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் விலகலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் விலகல் அய்ரோப்பிய நாடுகளிடையே கடுமையான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்தில் பிரிட்டன், ஸ்காட்லேண்ட், வேல்ஸ், வடக்கு அயர்லாந்த மாநிலங்கள் அடங்கியுள்ளன. ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மாநிலங்கள் அய்ரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கவே கூடுதலாக வாக்களித்துள்ளன. அய்ரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் விலக முடிவு செய்தவுடன், ஸ்காட்லாந்து, பிரிட்டனோடு இணைந்திருக்க விரும்பவில்லை. 2 ஆண்டுகளுக்குள் ஸ்காட்லாந்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரிட்டனோடு இணைந்திருக்கவே கூடுதலான ஆதரவு கிடைத்தது. இப்போது அங்கே கூடுதலானவர்கள் பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல விரும்பும் மனநிலையில் உள்ளனர் என்று பிரிட்டிஷ் ஏடுகள் தெரிவிக்கின்றன. சந்தை பொருளாதாரம், அடிப்படை மதவாதம் இரண்டும் இன்று உலகநாடு களில் பிரச்சினைகளாக முன் நிற்கின்றன. இதில் இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் இருக்கிறது. எந்த ஒரு தேசத்துடனும் இணைந்து நிற்க...