Tagged: பிரன்ட்லைன்

அரசியல் சமூகத்திலிருந்து மதத்தை விலக்கி வைப்பதே மதச் சார்பின்மை சங்பரிவார் புரட்டுகளுக்கு மறுப்பு

இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர் ஜவகர்லால் நேரு பல்கலையின் பேராசிரியர் ரொமிலா தாப்பர். சங்பரிவார் முன் வைக்கும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு சரியான மறுப்புகளை முன் வைத்து ‘பிரன்ட்லைன்’ (செப்.18) ஆங்கில இதழுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள்: வரலாற்று விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ‘ஆரியர்கள்’ எனும் தலைப்பு தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆரியக் கலாச்சாரத்தின் மேலாதிக்கத்தையோ, இந்திய மண்ணில்தான் ஆரியர்கள் உதித்தார்களா? போன்ற கேள்விகளையோ யார் எழுப்பினாலும் உடனடியாகச் சமூக வலை தளங்களில் அவர்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியமான வரலாற்று விவாதங்களுக்கு இடமில்லாமல் போகிறது. கலாச்சாரத் தேசியம் என்பதற்கு அர்த்தம், தேசிய மயமாக்கப்பட்ட கலாச்சாரம் என்பதுதானே? அதாவது, ஒரே ஒரு கலாச்சாரம் மட்டுமே உள்ளது எனச் சொல்வது தானே? என்று கேட்கிறார்கள். சமகாலப் பாரம்பரியம் எதுவும் அசலானது இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் தோன்றிய பாரம்பரியங்களில்கூட ஏதோ ஒரு கட்டத்தில் இடையூறு நிகழ்ந்துள்ளது. ஆனால் ஆங்கிலேயர்...