Tagged: பசுவதை தடுப்பு சட்டம்

‘பசுவதைத் தடை’ச் சட்டத்தின் அரசியல் பின்னணி

பசுவதைத் தடைச் சட்டத்தின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான பின்னணி: ட           ஆக. 21, 2003 – வேளாண் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பசுவதை தடை மசோதா அறிமுகம் செய்ய முயன்றார். கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் எதிர்த்தன. காங்கிரசும் எதிர்க்கவில்லை; அ.இ.அ.தி.மு.க.வும் எதிர்க்கவில்லை. ட           1924இல் காந்தி இவ்வாறு எழுதினார்: “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து இராஜ்யம் அல்ல; இந்து இராஜ்யமாக இருந்த போதும் சகிப்புத் தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்கு சான்றாக இருக்கும். ஆகவே இந்து ராஜ்யம் குறித்து கனவு காண்பதுகூடத்  தேசத் துரோகம் என்றே நான் கூறுவேன்” என்றார் காந்தி. ட           சங்பரிவாரங்கள், ‘கோமாதா பக்தி’யை முஸ்லிம், கிறிஸ்தவ வெறுப்பு அரசியலுக்கே...