Tagged: நேரு

வரலாறு ஒரே ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மொழியானது இந்தி

  மத்திய பா.ஜ.க ஆட்சி இந்தித் திணிப்பை தீவிரமாக்கி வரும் நிலையில் இந்த வரலாற்றுப் பின்னணியை அரசியல் நிர்ணயசபையில் நடந்த விவாதங்களை விளக்குகிறது. இந்தக் கட்டுரை; கட்டுரையை படிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்தியா “சுதந்திரம்“ பெறும் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பே 1946ம் ஆண்டிலேயே அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் நிர்ணயசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் யார்? 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களுக்காக ஒரு அரசியல் கூட்டத்தை தயாரித்து அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரிமை கிடையாது சொத்து-கல்வி அடிப்படையில் நூற்றுக்கு 14 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அப்படியே அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட்டது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்; 1946ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபை அரசியல்சட்டத்தைதயாரித்து -1949ம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதலைப் பெற்றது. அரசியல் நிர்ணயசபையின் தலைவர்...

அரசியல் வழியாக – ‘சோதிட நம்பிக்கையாளர்கள்’ எழுப்பும் கேள்விகளுக்கு பதில்

அரசியல் வழியாக – ‘சோதிட நம்பிக்கையாளர்கள்’ எழுப்பும் கேள்விகளுக்கு பதில்

சோதிட நம்பிக்கையாளர்கள் சோதிடமும் ஒரு அறிவியல் தான் என்று முன் வைக்கும் வாதங்களுக்கு அறிவியல் மறுப்பு. எம்.ஜே. அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது. குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில் ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு. 1950களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். நடக்கப் போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள். சோதிடர் சொன்ன நாள் 27 மே, 1954. இந்தச் சம்பவத்திற்கு நேர்மாறாக இன்னொரு சம்பவத்தை நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த மத்தாய் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார். நேரு அவரிடம், “நான் 74 வயதுக்கு மேல் இருக்க மாட்டேன்” என்று சொல்லி யிருக்கிறார். சோதிடர்கள் சொல்லியிருப்பார்கள் என்ற மத்தாய்க்கு நேரு அளித்த பதில்: “இல்லை. குடும்பத்தில் இருந்த ஆண்களின் வயதுகளின் சராசரியைக் கணக்கிட்டேன். சரியாக 74 வருடங்கள், 6 மாதங்கள், 13 நாட்கள் வருகின்றன.”...