Tagged: நிமிர் மாத இதழ்

உங்கள் கரங்களில்

உங்கள் கரங்களில்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு ஓர் மாத இதழின் தேவையை தோழர்களும் ஆதரவாளர் களும் நீண்டகாலமாக வற்புறுத்தி வந்தார்கள், அவர்களின் விருப்பம். இப்போது செயல் வடிவ மாகியுள்ளது. ‘நிமிர்வோம்’வந்துவிட்டது.இதுஒருஇயக்கத்தின் ஏடு என்றாலும் ‘நிமிர்வோம்’ பெரியாரியம் குறித்த விரிவான விவாதத்துக்கும் -உரையாடல்களுக்கும் தனது பக்கங்களைத் திறந்த வைத்திருக்கும் என்று உறுதி கூறுகிறோம். இந்துத்துவா சக்திகளின் நவீன அவதாரங்கள், உலகமயமாக்கலை உருவாக்கி வரும புதிய பண்பாட்டு நெருக்கடிகள், ஜாதி படிநிலைக் கட்டமைப்பில் உருவாகி வரும் மாற்றங்கள், மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் மூலாம் பூசும் முயற்சிகள், பெண்ணியம் குறித்த நவீன சிந்தனைகள் உள்ளிட்ட கருத்துகளைப்பரிமாறும் களமாக ‘நிமிர்வோம்’ நிற்கும். தமிழ்நாட்டில் சமூக-பொருளாதார மாற்றங் களை கோரி நிற்கும் -சமூக சக்திகளின் -தோழர்களின்ஆதரவுத்தளத்தைவிரிவாக்க, ‘நிமிர் வோம்’ தொடர்ந்து செயலாற்றும். நிமிர் ஜனவரி 2017 இதழ்

வெளி வந்துவிட்டது!

வெளி வந்துவிட்டது!

‘நிமிர்வோம்’ பிப்ரவரி இதழ் பெரியார் கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும் – பேராசிரியர் நன்னன் அவர்களுடன் நேர்காணல் போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க இலங்கையின் சதி. – பூங்குழலி ‘டிரம்ப்பின்’ இந்துத்துவம். உலகையே கூறுபோடும் அக்கிரகாரங்கள். – சுப. உதயகுமார் நூற்றாண்டுகாணும் எம்.ஜி.ஆர் : நிறையும் குறையும் பஞ்சாங்கம் அறிவியலா? – புரட்சிகர விஞ்ஞானி மேக்நாத் சாகா தந்த பரிந்துரை மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம் மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 16022017 இதழ்

தோழர்களுக்கு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வேண்டுகோள்!

கழகத்தின் மாத இதழான ‘நிமிர்வோம்’ இரண்டாவது இதழ் (பிப்ரவரி) வெளி வந்து விட்டது. இதழுக்கான பதிவு – அஞ்சல் கட்டணச் சலுகைகளுக்காக செய்யப்பட வேண்டிய பணிகள் நடந்து வருகின்றன. அஞ்சல் கட்டண சலுகைக்கான அனுமதி கிடைப்பதற்கு சில மாதங்கள் ஆகக்கூடும். இப்போது ஓர் இதழை அஞ்சல் வழியாக அனுப்பிட முத்திரைக் கட்டணமாக ரூ.8 செலுத்த வேண்டும்.  நடைமுறையில் இது இதழ் தயாரிப்புக்கான செலவுகளை சுமையாக்கி விடும். எனவே, கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் இதழ்களைப் பெற்று மக்களிடம் கொண்டு சேர்க்கும் தேவை இருக்கிறது. எனவே தோழர்கள், கூடுதல் எண்ணிக்கையில் இதழ்களைப் பெற்று விற்பனை செய்ய தலைமைக் கழக முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகி, ‘நிமிர்வோம்’ பெரியார் முழக்கம் 16022017 இதழ்