இப்படியும் இருந்தன மூடநம்பிக்கைகள்!
தேவதாசி பிரதா: ஒரு இளம் பெண்ணின்வாழ்க்கையை கடவுளின் கவுரவத்திற்கு தியாகம் செய்வது என்ற பெயரால் சாகடிப்பது; தேவதாசி முறையில் ஒரு இளம் பெண்ணைத் கடவுளுக்கு மணம் முடிப்பது; அதன் மூலம் பாலியல் தொழிலில் இளம் பெண்ணை உள்ளாக்குவது; கங்கை நதியில் மூழ்கி தனது உயிரை மாய்த்துக் கொள்வது; இவை போன்ற இளம் பெண்களுக்கு இழைக்கும் சமூக பழக்கவழக்கம் எனும் கொடுமைகள் ‘தேவதாசி பிரதா’ எனும் பெயரில் நடந்தது. காஸிகர்வதா: காசியில் உள்ள விஸ்வேஸ்வ நாத் ஆலயத்தில் ஒரு தீர்த்தக் கிணறு இருந்தது. மோட்சம் அடைய விரும்புபவர்கள் அந்தக் கிணற்றில் வீழ்ந்து மரணம் அடைந்தால் மோட்சமடைந்து விடலாம் என்ற நம்பிக்கை. இது பண்டைய மூடநம்பிக்கை. சதி பிரதா : கணவன் இறந்துவிட்டால் அவனோடு மனைவியும் உடன்கட்டை ஏறி எரிந்து உயிருடன் சாக வேண்டும். இளம் மனைவி மறுத்தால் உறவினர் சேர்ந்து பலாத்காரமாக அவளை எரியும் நெருப்பில் தள்ளி விடுவார்கள். இது பண்டைய மூட நம்பிக்கை....