Tagged: தீ மிதிப்பது

தீ மிதிக்கு தடை – கருநாடக முதல்வரின் பாராட்டத்தக்க அறிவிப்பு

தீ மிதிக்கு தடை – கருநாடக முதல்வரின் பாராட்டத்தக்க அறிவிப்பு

கருநாடகாவில் தும்கூரு என்ற ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் தீ மிதியின்போது தீயில் விழுந்து 70 பக்தர்கள் படுகாயமடைந்தனர். 35 வயதான பெண் தீக்காயங்களால் கடந்த மார்ச் 17ஆம் தேதி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து கருநாடக சட்டசபையில் தீக்குண்டத்துக்கு உரிய பாதுகாப்புகள் செய்யப்படவில்லை என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அப்போது சீரிய பகுத்தறிவாளரான கருநாடக முதல்வர் சித்தராமய்யா, ‘தீ மிதி நடத்த முழுமையாக தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று  சட்டசபையில் தெரிவித்தார். பாராட்ட வேண்டிய முதலமைச்சர்! பெரியார் முழக்கம் 31032016 இதழ்

தீ மிதிப்பது பக்தியாலா?

தீ மிதிப்பது பக்தியாலா?

தீயில் மனிதன் நடப்பது என்பது ‘கடவுள் செயல்’ என்றும், கடவுள் மீது உள்ள பக்தியின் காரணமாகவே நடக்க முடிகிறது என்றும் மக்கள் நம்பி னார்கள். மதவாதிகள் தங்கள் மதத்தைப் பரப்ப இம்முறையைத் தங்கள் மத விழாவாகப் பயன்படுத்தினார்கள். இம்முறை இந்தியாவிலும், மலேசியா விலும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், பரவலாக இந்துக்களும், சில இடங்களில் முகமதியர்களும் தீமிதி விழாக்களை நடத்துகிறார்கள். தீ குழியின் அமைப்பு : தீ குழியின் அளவு ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்டிருக்கும். சராசரியாக 15 அடி நீளமும், 5 அடி அகலமும், 2 அடி உயரமும் உடையதாக இருக்கும். பாற்குழி ஒன்று இருக்கும். (பசு அல்லது வெள்ளாட்டின் பால் நிரப்பப்பட்ட சிறிய குழி) முதலில் பெரிய பெரிய மரக்கட்டைகளை எரிய விடுகிறார்கள். அந்த மரக்கட்டைகள் எரிந்து தணல் கட்டிகளாக ஆன பின்னால் இரண்டு மூன்று பேர் நீளமான மூங்கிற் குச்சிகளைக் கொண்டு தணல் கட்டிகளைக் குத்தி உடைத்து தீ குழி...