Tagged: தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகம்

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

அரியலூர் நந்தினிக்கு நீதிவழங்கு. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் செயல்படாத காவல்துறையின், “தீண்டாமை ஒழிப்பு பிரிவு” முற்றுகை போராட்டம்….! நாள்:31.01.2017. செவ்வாய்க்கிழமை. நேரம்:காலை11.00 மணி.  

முற்றுகைப் போராட்டம் ஏன்?

முற்றுகைப் போராட்டம் ஏன்?

தமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன், கோகுல் ராஜ், இப்போது சங்கர். இன்னும் எத்தனை படுகொலைகள் தொடரப் போகிறதோ? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. தென் மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் ஜாதி வெறி சக்திகள் சவால் விடுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறையோ, தமிழக அரசோ எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் ‘கவுரவக் கொலைகளே’ நடப்பது இல்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்தார், ஓ. பன்னீர்  செல்வம். மத்திய சட்ட ஆணையமும் மகளிர் ஆணையமும், ‘கவுரக் கொலைகளை’ தடுப்பதற்கான சட்டவரைவுகளை உருவாக்கி, மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனுப்பியது. தென் மாநிலங்களில் இதற்கு பதில் அளிக்காத ஒரே ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மட்டும் தான். தென் மாவட்டங்களில் 5 ஆண்டு களில் நடந்த 600 படுகொலைகளில் 70 சதவீதம் ஜாதி ஆணவக் கொலைகள், இதைத் தடுத்து...