Tagged: திவிக தோற்றம்

“திராவிடர் விடுதலைக் கழகம்” இது புதிய பெயரல்ல, புதிய முன்னெடுப்பு

“திராவிடர் விடுதலைக் கழகம்” இது புதிய பெயரல்ல, புதிய முன்னெடுப்பு

12-08-2012 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்களின் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாக சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமை செயற்குழு உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். நேரில் வர இயலாத குமரி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா, நெல்லை மாவட்ட அமைப்பாளர் காசிராசன், கடலூர் மாவட்டத் தலைவர் வடலூர் வெங்கடேசன் ஆகியோர் தொலைபேசி வழியாக தங்கள் ஆதரவை கழகத்தலைவரிடம் கூறியிருந்தனர். மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு மாரப்பனார் தனது மகன் உடன் கலந்துகொண்டார், மேலும் ஈரோடு விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அறிவுக்கன்பன் என்கின்ற...

புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்

புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்

“பெரியாரியலில் உண்மையான பற்றுதலும் – அதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உந்துதலும், அதற்கென இழப்புகளையும் சந்தித்துக் களப்பணியாற்றும் துடிப்பும் கொண்ட பெரியாரின் தொண்டர்கள் ஒன்று திரண்டு செயலாற்றவேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம்தான் இப்போது உருவாகி இருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம்” இது 2001 ஆம் ஆண்டில் 5 பெரியாரிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து தந்தைபெரியார் திராவிடர் கழகமாகச் செயல்பட முன்வந்தபோது மக்கள் முன் வைத்த பிரகடனம், இந்த ஐந்து அமைப்புகளும் தங்கள் அமைப்புகளின் அடையாளங்களைவிட பெரியாரின் இலட்சியத்தை கொண்டு செலுத்தலே முதன்மையான பணியாக ஏற்றன என்பதை இந்தப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் அந்த இலட்சியத்தை அடையவே இயக்கம் என்ற பாதைமாறி, தங்கள் முந்தைய இயக்க அடையாளத்தை முன்னிறுத்தலே முதன்மை இலக்கு என்ற நிலை, பெரியார் திராவிடர் கழகத்திற்குள் உருவாக்கப்படுவதுதான் இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணமாகும். பெரியாரின் அடிப்படைத் தத்துவமான சாதிஒழிப்பு என்ற இலட்சியத்தையே தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக்கொண்டது. அதன்...