Tagged: தருண் விஜய்

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

திருக்குறள் பெருமையைப் பேசுகிறார், தருண் விஜய் என்று தமிழ்நாட்டில் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பாராட்டு மழைகளை பொழிந்தவர்கள் உண்டு. பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான அவர், அரித்துவாரில் கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை வைக்கப் போவதாகக் கூறினார். வைதீகப் பார்ப்பனர்கள், திருவள்ளுவர்  ‘தீண்டத்தகாதவர்’ என்று கூறி, சிலையை ‘புனித நதி’க் கரையில் நிறுவ எதிர்த்தனர். அதற்குப் பிறகு ‘சங்கராச்சாரி சதுக்கம்’ என்ற இடத்தில் சிலையை நிறுவ முடிவு செய்த போது சொரூபானந்த சரசுவதி எனும் பார்ப்பனர் தலைமையில் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். இது ஆதிசங்கரர் அறக்கட்டளைக் குரிய இடம். ஆதிசங்கரர் சிலை மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறி விட்டனர். கடைசியில் பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் சிலை திறப்பு நடந்தது. தருண் விஜய் இப்படியெல்லாம் நடத்திய ‘தமிழ்ப் பற்று’ நாடகம், இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. புதுடில்லி நொய்டா பகுதியில் ஆப்பிரிக்க நாட்டின் மாணவர் தாக்கப்பட்டது குறித்து சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு...

ஹரித்துவாரில் கங்கை கரையில் சிலை திறப்பை பார்ப்பனர்கள் தடுத்து நிறுத்தினர் திருவள்ளுவர் தீண்டப்படாதவராம்!

ஹரித்துவாரில் கங்கை கரையில் சிலை திறப்பை பார்ப்பனர்கள் தடுத்து நிறுத்தினர் திருவள்ளுவர் தீண்டப்படாதவராம்!

திருவள்ளுவர் தீண்டப்படாத சாதிக்காரர். எனவே அவர் சிலையை ஹரித்துவார் கங்கை நதிக் கரையில் நிறுவ அனுமதிக்க முடியாது என்று பார்ப்பன சாமியார்கள், பார்ப்பன அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளுவர் சிலை திறப்பையும் நிறுத்தி விட்டனர். தருண் விஜய் என்ற பா.ஜ.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்மைக்காலமாக திருக்குறள் மீது தனக்கு மிகவும் ஈடுபாடு இருப்பதாகக் கூறி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவப் போவதாக கன்யாகுமரியிலிருந்து திருவள்ளுவர் சிலையை பல ஊர்கள் வழியாக ‘யாத்திரை’யாகக் கொண்டு சென்றார். கடந்த ஜூன் 29ஆம் தேதி கங்கை நதிக்கரையில் ‘ஹர்கி பவுரி’ என்ற இடத்தில் சிலை நிறுவ ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஜன. 28ஆம் தேதியே பார்ப்பன புரோகிதர்களும் பார்ப்பன சாமியார்களும் சிலை நிறுவுவதை எதிர்த்து போராடத் தொடங்கிவிட்டனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம், “திருவள்ளுவர் தீண்டப்படாத சமுதாயத்தில் பிறந்த ஒரு தலித். அவரது சிலையை...