Tagged: தமிழ் தேச மலைநாடு மக்கள் கட்சி மாநாடு

தமிழ் தேச மலைநாடு மக்கள் கட்சி மாநாடு

21-12-2015 அன்று மாலை 3-00 மணி தொடங்கி மாலை 6-30 மணிவரை, சேலம் போஸ்மைதானத்தில், தமிழ் தேச மலைநாடு மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பொ.பா.இராமசாமி தலைமையில் நடைபெற்றது. முழுதும் பழங்குடி மக்களின் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இக்கட்சியியின் மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அரசியல் சட்டம் அனுமதித்துள்ள ஐந்தாம் பட்டியலில் இணைப்பதின் வழியாக உரிமைகள்பல பெற உள்ள வாய்ப்புகள் பற்றியும், வன உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்த வலியுறுத்துவதால் உள்ள நன்மைகள் குறித்தும், அதற்கென தமிழகம் தழுவிய ஒருங்கிணைந்த கிளர்ச்சிகள் நடதவேண்டிய தேவை குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேலம் பெ.இராசகோபால், கான்ஷிராம் பகுஜன் கட்சித் தலைவர் வடலூர் சாமிதுரை, நீலகிரி ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் எம். ஆல்வாஸ், தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒய்.வின்சென்ட் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்