Tagged: தமிழீழத்திற்க புதிய சட்டம்

தமிழ் ஈழத்திற்கு புதிய அரசியல் சட்டம் தயாராகிறது

நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் சார்பில் ‘ஈழம் தொடரும் துயரமும்; நமது கடமையும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் கடந்த செப்.25 மாலை 6 மணியளவில் சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்புடன் நடந்தது. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தும் அதில் இடம் பெற்றுள்ள தமிழக உறுப்பினர்கள் தமிழினியன், முகேஷ் தங்கவேலு ஆகியோரை அறிமுகம் செய்தும் பேராசிரியர் சரசுவதி அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன், தியாகு, அருட் தந்தை குழந்தைசாமி, பேராசிரியர் அபுல்பாசல், பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் உரையாற்ற, நிறைவாக பண்ருட்டி இராமச்சந்திரன் பேசினார். அருட்தந்தை குழந்தைசாமி ஒரு மாத காலம் தமிழர் பகுதி முழுதும் நேரில் சென்று பார்வையிட்டு திரும்பியுள்ளார். அவர் மக்களின் துயரங்களை சிங்கள ஆக்கிரமிப்பு களை பகிர்ந்து கொண்டார். நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில், தமிழ் ஈழத்துக்கான புதிய அரசியலமைப்பு, சர்வதேச சட்ட நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது என்ற தகவலைதோழர் தியாகு அறிவித்தார். நிறை வுரையாற்றிய முன்னாள் அமைச்சர்...