இதில் என்ன குற்றம், சிந்திப்பீர் தமிழர்களே!
ராஜிவ் கொலையில் சதி செய்த குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்த 7 பேரை உச்சநீதி மன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்தது. காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா என்று போராட்டம் நடத்துகிறார்கள். நாட்டின் பிரதமரைக் கொன்றவர்களையே விடுதலை செய்தால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்புக் கிடைக்கும் என்கிறார், ராகுல் காந்தி. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார் சுப்ரமணியசாமி. மக்களின் சிந்தனைக்கு நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்: ராஜிவ் காந்தி கொலையில் சி.பி.அய். 41 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் கண்டது. இதில் நேரடி தொடர்புடையவர்களான தாணு, சிவராசன், சுபா உள்ளிட்ட 12 பேர் ஏற்கனவே தேடுதல் வேட்டையில் இறந்து விட்டார்கள். 26 பேர் குற்றம்சாட்டப்பட்டு, ‘தடா’ நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர். பூந்தமல்லி ‘தடா’ நீதிமன்றம் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை அறிவித்தது. இந்த...