சர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம்
இந்தியாவின் ஜனநாயகம் தேர்தல் முறை குறித்து, பெரியார் கருத்துகளின் தொகுப்பு. கட்சியின் பெயரால் அரசாங்கம் நடைபெறுகிறதென்றால் அது எப்படிச் சனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களின் விருப்பத் திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால் வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதே முறையாகும். தன் கட்சிக்காக என்று நீதியையும் நேர்மையையும் கைவிடு வதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும். – ‘விடுதலை’ 12.1.1956 சனநாயகம் என்று சொல்லுவதன் மூலம் நாம் எந்தவிதப் பலனும் அடைய முடியாது. நமக்கு அதில் எந்தவித உரிமையும் இருக்க முடியாது. இந்திய ஆட்சியில் இருக்கும் வரை நாம் மைனாரிட்டி நாட்டவர். அதில் அடிமையாகத்தான் இருக்க முடியும். சனநாயக இந்திய ஆட்சி முறை என்ற அந்த முறையே பித்தலாட்டமான முறையாகும். நம்மை நிரந்தரமாய் அடிமைப்படுத்தி ஆள ஏற்படுத்தப்...