Tagged: செங்கொடி

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ நடத்திய செங்கொடி நினைவு நாள்

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ நடத்திய செங்கொடி நினைவு நாள்

தலைநகர் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் செங்கொடி நினைவேந்தல் பொதுக் கூட்டம் ஆக.26 அன்று மாலை சேத்துப்பட்டு வைத்தியநாதன் வீதியில் எழுச்சியுடன் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெறும் முதல் பொதுக் கூட்டமும் இதுவேயாகும். கூட்ட மேடைக்கு அருகே செங்கொடி நினைவுத் தூண் ஏற்கனவே கழக சார்பில் நிறுவப்பட்டிருந்தது. சென்னை மாவட்டக் கழகத் துணை செயலாளர்  ஆ.வ. வேலு தலைமையில் கு. வெங்கடேசன் வரவேற்புரையுடன் கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தமிழக மக்கள் உரிமைக் கழக வழக்கறிஞர் பா. புகழேந்தி, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தியும், தூக்குத் தண்டனையை ஒழிக்குமாறு வலியுறுத்தியும் பேசினர். நிகழ்வில் தோழர் செங்கொடிக்கு கூட்டத்தினர் அகவணக்கம் செலுத்தினர்....

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த தோழர் செங்கொடியின் முதலாம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி 28.8.2012 செவ்வாய் கிழமை அன்று காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. அன்று காலை 8 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் மன்ற கொடியினை ஏற்றி வைத்தார். காலை 10 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. வந்திருந்து நினைவுச் சுடரையேற்றி நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் அஞ்சலி செலுத்திச் சென்றனர். மாலை 6 மணிக்கு நினைவேந்தல் பொதுக் கூட்டம் பறை ஆட்ட நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காஞ்சி மக்கள் மன்றப் பொறுப்பாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சிறுவர்களின் நடனம், கவிதை, இடையிடையே உரை என்று நடைபெற்றது. ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உரையாற்றி முடிந்ததும் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. எனவே கூட்டம் தடைபட்டது. திராவிடர்...