Tagged: சுயநிர்ணய உரிமை

இந்தியாவில் சுயநிர்ணய உரிமை கோருவது சட்டப்படி குற்றமா?

உலக அளவில் சுய நிர்ணய உரிமை என்பது பல காலக் கட்டங்களில் பலவித வரலாற்று சிறப்பு மிக்க விளக்கங்களை உள்வாங்கி, இன்று செறிவுமிக்க ஒன்றாக பரிணமித்திருக்கிறது . ஆனால் வரலாற்று நெடுகிலும் அது மிகவும் விவாதிக்கப்பட்ட, கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் அதன் பொருத்தப்பாடு என்பது அரசியல் நடைமுறைகளின் ஊடாகவே சாத்தியப்பட்டுள்ளது. எனவே அது சட்டப் பூர்வமாக கோரத்தக்க உரிமைதான். எனினும் அதன்நடைமுறை,பயன்பாடு என்பதுஅரசியல் செயல்பாடுகள் சார்ந்ததாகவே உள்ளது. சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் தோற்றம் என்பது, குறிப்பாக அய்ரோப்பிய சூழலில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் விளைவாகவே இருந்தது. அண்மையில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பேசப்படும் பொருளாகமாறியது. இந்தமாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு பண்பாட்டு நிகழ்வில் எழுப் பப்பட்ட முழக்கங்கள் இந்தியாவில்...