Tagged: சினிமாவில் ஜாதியம்

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஜாதிய கலாச்சாரம் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்

(தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பார்ப்பனியம் கட்டமைத்த ‘கீழ்மை- மேன்மை’ ஜாதி கலாச்சாரம் குறித்த விரிவான அலசல்) 1930களில் தமிழில் பேசும்படம் வந்த தருணம், தமிழ் அடிவர்க்க/கீழ்சாதி திரைப் பட பார்வையாளர்களுக்கு மாபெரும் உற் சாகத்தை எற்படுத்திய தருணமாகும். இந்தப் புதிய பொழுதுபோக்கு பற்றி அடித்தள மக்கள் உற்சாகமடைந்த அதே வேளையில் உயர்வர்க்க / மேல்சாதி மேட்டுக்குடியினர் பெரும் கவலைக் குள்ளானார்கள்.தொடக்கத்தில்இந்தகவலைக்கு அடித்தள மக்களின் ரசனைக் குறைவைக் காரணமாக்கி,உயர்கலாச்சாரம்,கீழ்கலாச்சாரம் என்ற போர்வையில் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள மேட்டுக்குடியினர் முற்பட்டபோது, புதிய சிக்கல்கள் தோன்றின. உயர் கலாச்சாரம், கீழ்கலாச்சாரம் எனும் பிரிவைப் பாதுகாக்கும் கலாச்சார வரம்புகளையெல்லாம் ஆட்டி அசைத்து, மாற்றியமைக்கும் வலிமை திரைப் பட சாதனத்தில் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஏற்கெனவே நிலவிய கலாச்சார வரம்புகளை தகர்க்கவும், தனிமைப்படுத்தப் பட்டுக் காப்பாற்றப் பட்ட மேட்டுக்குடி சாமானிய கலாச்சார வழக்கங்களை மாற்றியமைக்கவும் சினிமாவுக்கு இருந்த ஆற்றலுக்குக் காரணம் அது இதுவரை அறிந்திராத, எதிர்பார்க்காத, விதங்களில் மேட்டுக்குடியையும்...