Tagged: சித்தூர்

மக்கள் பேராதரவுடன் சித்தூரில் கழகக் கூட்டம்

10-1-2016 ஞாயிறு அன்று மாலை சேலம் மாவட்டம் சித்தூர் சந்தைத் திடலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சேலம் (மேற்கு ) மாவட்டத் தலைவர் கு.சூரியக் குமார் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுத் தோழர்களின் பறைமுழக்கம், தொடர்ந்து பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமல்ல, தந்திரமே நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்தூர் தோழர் இரா.ரகு வரவேற்புரையாற்ற பொதுக்கூட்டம் தொடங்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செய்லாளர் ஆதிமுரசு, ஆதித் தமிழர்ப் பேரவை மாவட்டச் செயலாளர் க.இராதாகிருட்டிணன், நாமக்கல் மாவட்ட கழகத் தலைவர் மு.சாமிநாதன் ஆகியோர் உரையைத் தொடர்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவ்வூரில் கழகக் கூட்டம் நடப்பது இதுவே முதல்முறையாகும். பெரும் திரளாகக் கூடிய பொதுமக்கள் கூட்டத்தின் இறுதிவரை இருந்து கூட்டத்தை, உற்சாகமாகக் கைதட்டியும், ஆதரவு குரல் எழுப்பியும் கவனித்தனர்....