Tagged: சிங்களர் பயிற்சி

ஏற்காடு தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்களுக்கு பயிற்சித் தருவதை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஏற்காடு தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்களுக்கு பயிற்சித் தருவதை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம்

29.8.2012 அன்று ஏற்காடு மான்போர்ட் தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்கள் 22பேருக்கு மட்டைப் பந்து பயிற்சிக் கொடுக்கப்பட்ட செயதியறிந்து, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அ. பெருமாள் தலைமையில், ஏற்காடு தோழர்கள் 15 பேரும், சேலம் நகரத் தோழர்கள் இரா. டேவிட் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையறிந்து சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏற்காடு விடுதலை சிறுத்தைக் கட்சித் தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர். பள்ளி தாளாளர் வாக்கிஷ் என்பவரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிங்கள மாணவர்களை உடனே வெளியேற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். காவல் துறையின் சமாதானத்தை ஏற்க மறுத்து பள்ளி தாளாளர் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்தார். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என தோழர்களிடம் உறுதியளித்தப் பின்பு தோழர்கள் கலைந்து சென்றனர். பெரியார் முழக்கம் 06092012 இதழ்

தமிழக முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் உருக்கமான கடிதம்

தமிழக முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் உருக்கமான கடிதம்

தமிழக சிறைகளில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக்கு உரிய தகுதி பெற்ற சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து முஸ்லீம்கள் அமைப்பு முதல்வருக்கு (ஜமா அத்துல் உலக மாசபை) வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதம் விவரம்: தமிழகத்தில் மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று சிறப்பான முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்களுடன், எங்கள் சமூகத்தின் சார்பாக ஒரு முக்கிய கோரிக்கையை உங்கள் முன் வைத்திட விரும்புகின்றோம். முந்தைய தி.மு.க. அரசு சிறைக் கைதிகள் பொது மன்னிப்பு விடுதலையின்போது முஸ்லிம் சிறைக் கைதிகள் விஷயத்தில் குறிப்பாக அரியானா மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் (உய சூடி,30.2005) வழங்கிய உத்தரவு வழிகாட்டுதலை புறந்தள்ளி பாரபட்சமான முறையில் நடந்து கொண்டது. தமிழக அரசு பொது மன்னிப்பு விடுதலையில் தகுதியற்ற வழக்குகள் எவையெல்லாம் என்பதனை அரசாணை எண். 1762/87 இல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில் இவ்வரசாணையில்...