Tagged: சமஸ்கிருதம்

மெக்கால்லே கல்வித் திட்டம்

மெக்கால்லே கல்வித் திட்டம்: கீழே ஒரு சிறிய படம் மெக்கால்லே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு உரையின் ஒரு பகுதி என்றும், அதில் சொல்லியிருப்பதாக… “அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும் ஒரு திருடனையோ ஒரு பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும் ஆன்மீக பலம் பொருந்தியதாகவும் உள்ளது. எனவே அதை அடிமைப் படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்து விட்டு ஆங்கில வழி கல்வியைப் பயன்படுத்தலாம்.” பார்ப்பனியம் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய பொய்களில் இதுவும் ஒன்று. இன்று வரையிலும் அந்தப் பொய் நிலைத்து நிற்கிறது. அவர் அதை இங்கிலாந்துப் பாராளு மன்றத்தில் சொன்னதாகச் சொல்லப் படும் 2-2-1835 ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. அவர் இந்தியாவில் இருந்தார். சரி அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டி எடுத்துப் பார்த்தால் ஆயிரம்...

ஜூலை 8ஆம் தேதி மாவட்டங்களில் கழகம் ஆர்ப்பாட்டம் ‘சமஸ்கிருதத்தை எட்டாவது பட்டியலிலிருந்து நீக்குக!”

ஜூலை 8ஆம் தேதி மாவட்டங்களில் கழகம் ஆர்ப்பாட்டம் ‘சமஸ்கிருதத்தை எட்டாவது பட்டியலிலிருந்து நீக்குக!”

மேட்டூரில் கூடிய செயலவைக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். மத்திய மனித வளத் துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி அய்.அய்.டி.களிலும் மத்திய பாடத் திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.ஈ. பள்ளி களிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணித்து வருகிறது. சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பனப் பண்பாட்டைத் திணிப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும். அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ். சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று கொள்கையாக அறிவித்திருக் கிறது. ஆர்.எஸ்.எஸ். தனது கிளை அமைப்புகள் அனைத்துக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டி இருக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இல்லை. அது பேச்சு மொழியாகவும் இல்லை. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் சமஸ்கிருத நூல்களின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்டதாக எந்த ஒரு விஞ்ஞானியும் இதுவரை கூறவும் இல்லை. கண்டுபிடிப்புகள் வந்த பிறகு சமஸ்கிருத நூல்களிலேயே இருக்கிறதே என்று கூறுவது ஒரு வழக்கமாகி விட்டது. சமஸ்கிருத...

அறிஞர்களின் வடமொழி எதிர்ப்பு

அறிஞர்களின் வடமொழி எதிர்ப்பு

சமஸ்கிருதப் பண்பாடு – தமிழ் மொழிக்கு எதிரானது என்பதை விளக்கிடும் அறிஞர்கள் கருத்து. விவேகானந்தர் எதிர்ப்பு “நான் என் ஆயுள் முழுவதும் சமஸ்கிருத மொழியைப் பயின்று கொண் டிருக்கின்றேன். எனினும் எனக்கே ஒவ்வொரு தடவையும் புதியதாகத் தோன்றுகிறதெனில், சாதாரண மக்களுக்கு அவற்றைப் பயில்வது எவ்வளவு சிரமமாயிருக்கும். எனவே இவ்வெண்ணங்கள் பொது மக்களுடைய சொந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.” (விவேகானந்தர் – இந்திய பிரசங்கங்கள் பக்கம் 183-84) வள்ளலார் எதிர்ப்பு வடலூர் இராமலிங்க அடிகளார் பின்வருமாறு சமஸ்கிருதத்தைப் பற்றி எழுதியுள்ளார். “இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பொழுதுபோக்கையும் உண்டு பண்ணு கின்ற மொழி.” (வள்ளலார் ஒருமைப்பாடு பக்கம் 284) இப்படி எழுதிய வள்ளலார், “இத்தகைய ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்தில் என் மனம் செல்லாமல், எளிய இனிய தமிழ் மொழியில் மனம் செல்லுமாறு பணித்தாயே” என்று மனமுருகி இறைவனைப் புகழ்கிறார். கால்டுவெல் எதிர்ப்பு வடமொழி, தமிழ் முதலான பல மொழிகளில்  சிறந்த பயிற்சியும், புலமையும் உடைய...

சமூகத்தை பார்ப்பனியமாக்கிய சமஸ்கிருதம்

சமூகத்தை பார்ப்பனியமாக்கிய சமஸ்கிருதம்

சமஸ்கிருதத்தை கல்வி நிறுவனங்களில் பா.ஜ.க. ஆட்சி திணிப்பது பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பேயாகும். சமஸ்கிருதத் திணிப்பால் சமூகத்தில் நடந்த பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்புகளை எதிர்த்து போராடிய, போராடி வரும் நாடு தமிழ்நாடு. இது குறித்து முனைவர் பொற்கோ எழுதிய கட்டுரையிலிருந்து… வடமொழிச் செல்வாக்கு சமயங்களையும் அரசர் களையும் தன்னுள் அகப்படுத்திய பிறகு சமுதாய வாழ்விலும் ஊடுருவிப் பரவியது. சங்க காலத் தமிழரசர்களின் பெயர்களையும் பிற்காலச் சோழ பாண்டிய வேந்தர்களின் பெயர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வடமொழிச் செல்வாக்கின் வளர்ச்சி தெளிவாகப் புலப்படும். ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதிராஜன், குலோத்துங்கன், விக்ரமன், ராஜகேசரி, பரகேசரி முதலான பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ்ப் பெயராக இல்லை. மாறவர்மன், சடையவர்மன், குலசேகரன் முதலான பெயர்களும் வடமொழிச் செல்வாக்கின் உச்சநிலையை நமக்கு உணர்த்துகின்றன. அரசர்களின் பெயர்களே இப்படி மாறிவிட்ட பிறகு அவர்கள் வழங்கும் பட்டங்களும் சிறப்புப் பெயர்களும் எப்படி இருக்கும்? அவையும் வடமொழி மயமாயின. தமிழகத்திலுள்ள ஊர்ப் பெயர்கள், கோயிலின் பெயர்கள், தெய்வத்தின்...

சமஸ்கிருதத்தில் கணித அறிவியலா? பொய் பிரச்சாரத்தின் முகமூடி கிழிகிறது

சமஸ்கிருதத்தில் கணித அறிவியலா? பொய் பிரச்சாரத்தின் முகமூடி கிழிகிறது

‘நாசா’ கூறியிருக்கிறது; ‘அமெரிக்க பேராசிரியர் கண்டுபிடித்திருக்கிறார்’ – இப்படி எல்லாம் சங்பரிவார் கூட்டம், தங்களது போலி அறிவியலுக்கு சான்று களைக் காட்டுவார்கள். ஆராயப் புகுந்தால் கடைசியில் இவை எல்லாம் போலிச் சான்றுகள் என்ற உண்மை வெளிச்சத் துக்கு வரும். கடந்த சில மாதங்களாக மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒரு கதையை கூறி வருகிறார். “சமஸ்கிருதத்தில், ‘சல்பாசூத்திரம்’ (Sulbasutras) என்று ஒன்று இருக்கிறது; கணிதத்தில் கிரேக்கர்கள், ‘பித்தகோரஸ்’ சூத்திரத்தை கண்டறிவதற்கு முன்பே, சல்பா சூத்திரத்தில் இந்தக் கணிதம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன” என்று கூறும் ஸ்மிருதி இராணி, அய்.அய்.டி. மாணவர்களின் அறிவியலுக்கு சமஸ்கிருதம் பயன்படும் என்றும் கூறி வருகிறார். இதன் காரணமாகவே அய்.அய்.டி. மாணவர் களுக்கு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக கற்பிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் நியாயப் படுத்துகிறார். ஸ்மிருதி இராணியின் கதை இத்துடன் முடியவில்லை. அமெரிக்காவின் கோர்வெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், 1990இல் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்து...

தலையங்கம் அய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம்

தலையங்கம் அய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம்

இந்திய தொழில்நுட்பக் கழகமான அய்.அய்.டி.களில் சமஸ்கிருதம் கற்றுத் தருவதற்கு மத்திய மனித வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி எழுத்து மூலம் அளித்த பதிலில், “வேதங்களில் கூறப்பட்ட அறிவியலை மாணவர்கள் படித்து அறிவதற்காக, சமஸ்கிருதத்தை கற்பிக்க தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்” என்று அய்.அய்.டி.களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். புராணம் மற்றும் வேதங்களில் கூறியுள்ள ‘அறிவியல்’ கருத்துகளைப் பரப்பிடவும், சமஸ்கிருதத்தைப் பாதுகாத்திடவும் மோடி ஆட்சி ஒரு குழுவை நியமித்திருக்கிறது. முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியான தமிழ்நாட்டைச் சார்ந்த கோபால்சாமி அய்யங்கார், இந்தக் குழுவின் தலைவர். இந்தக் குழு நவீனகால படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், பொறியியல், தொழில் நுட்பம் தொடர்பாக வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாம். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மோடி ஆட்சி இந்த முடிவை  எடுத்துள்ளதாம். இதற்கு ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த...

பிற மொழி மயக்கம் – தோழர் பூங்குழலி தஞ்சை 17072016

தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ஆம் மாநாட்டில் 17-07-2016 அன்று நிகழ்ந்த “பிற மொழி மயக்கம்” எனும் தலைப்பிலான அமர்வில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் மொழி என்பது தனித்து இயங்க வல்லது அல்ல. ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க அதை பேசும் ஒரு மக்கள் கூட்டம் வேண்டும். அவ்வாறு ஒரு மொழியை பேசும் மக்கள் கூட்டத்திற்கு அம்மொழி இனத்தவர் என்று பெயர். அப்படியான இனம் இல்லாத மொழி இறந்த மொழியாக கருதப்படுகிறது. கிரேக்கம், சமற்கிருதம் போன்ற உலகின் பல பண்டைய மொழிகள் இவ்வாறு இறந்த மொழியாகவே உள்ளன. ஆக ஒரு மொழி வாழ ஓர் இனம் தேவை. அதே போன்று மொழியை அழித்து விட்டு இனம் என்ற அடையாளத்தை தக்க வைக்க முடியாது. தங்கள் மொழியை இழந்தவர்கள் ஓர் இனமாக அறியப்படுவதில்லை. எனவே மொழியும் இனமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை...

இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா? – பெரியார்

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. “இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்’ என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில் தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவது தான் இந்தியின் தத்துவம். எனவே தான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு பேர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும். இந்தியில் மெச்சத்...

சமஸ்கிருதம் தேவையா? – பெரியார்

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் – தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் – பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் – நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத – நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள – இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள்...

இதுதான் சமஸ்கிருதம் ! – தந்தை பெரியார்

( “ புரட்டு இமாலயப் புரட்டு! “  நூலிலிருந்து…. ) சமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல; அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி. அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (Turkish) மொழி, ஈரானிய மொழி – பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.   மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.   இவர்கள் வடமேற்கிந்தியாவில் இரு முறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்; இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க –...

சமஸ்கிருத சனியன் – தேசீயத் துரோகி

தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.   சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனை களில் “சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும்” என்பதும் ஒரு யோசனை யாகும்.   உண்மையிலேயே “தேச மக்கள் கல்வியினால் அறிவு பெற வேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்” என்று விரும்பு கின்ற வர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு...

மத்திய மனிதவளத் துறையினரின் சமஸ்கிருதத் திணிப்பு

மத்திய மனிதவளத் துறையினரின் சமஸ்கிருதத் திணிப்பு

மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையிலான கல்வி ஆலோசனைக் குழு, மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. “ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகள் மாணவர்களுக்கு தேவையாக இருப்பினும் நமது பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக 3ஆவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசின் கீழ்வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சமஸ்கிருதம் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்படும். இதற்காக விரைவில் சமஸ்கிருத மொழி நூல்கள் அச்சிடப்பட இருக்கின்றன” என்று  ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சமஸ்கிருதத் திணிப்பு என்பது பார்ப்பனியத் திணிப்பேயாகும். இந்தியாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் மொழி சமஸ்கிருதம். அதுகூட பேசும் மொழி அல்ல; கோயில்கள், சடங்குகள், யாகங்களுக்காக பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி. பல்வேறு...