Tagged: சங்கரன்கோயில் திவிக

சங்கரன்கோவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதல் நிகழ்ச்சி 

  திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நூல் அறிமுக விழா கடந்த  மே 14 அன்று  அபர்ணாதேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு கழக பரப்புரை செயலர் பால்.பிரபாகரன் தலைமை வகித்தார் .நெல்லை மாவட்ட தலைவர் பால் வண்ணம் முன்னிலை ஏற்றார். ஒருங்கிணைப்பு செய்த சங்கரன்கோவில் தோழர் வே.ராமசாமியின் நோக்க உரையுடன்  நிகழ்ச்சி தொடங்கியது .சங்கை பெரியார் தொண்டர் பா.சதாசிவம் வரவேற்புரை நல்கினார்  “.பெரியார் இன்றும் என்றும் “அண்ணல் அம்பேத்கரின் “நான் ஓர்  இந்துவாக சாக மாட்டேன் “கழக மாத இதழான நிமிர்வோம் ஆகிய நூல்கள் அறிமுகப் படுத்தப்பட்டன . .நிமிர்வோம் இதழ்கள் குறித்து மதுரை தோழர் மா.பா மணிஅமுதனும் ..அம்பேத்கரின் நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் நூல்குறித்து தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியனும் கழகத்  தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் இன்றும் என்றும் நூல் பற்றியும் உரையாற்றினர் .பால்.பிரபாகரன் தலைமை உரை ஆற்றினார் ஆதித்தமிழர் பேரவையின் தென்னரசு ,முள்ளிக்குளம்...