Tagged: கோவை இராமகிருட்டிணன்

புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்

புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்

“பெரியாரியலில் உண்மையான பற்றுதலும் – அதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உந்துதலும், அதற்கென இழப்புகளையும் சந்தித்துக் களப்பணியாற்றும் துடிப்பும் கொண்ட பெரியாரின் தொண்டர்கள் ஒன்று திரண்டு செயலாற்றவேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம்தான் இப்போது உருவாகி இருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம்” இது 2001 ஆம் ஆண்டில் 5 பெரியாரிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து தந்தைபெரியார் திராவிடர் கழகமாகச் செயல்பட முன்வந்தபோது மக்கள் முன் வைத்த பிரகடனம், இந்த ஐந்து அமைப்புகளும் தங்கள் அமைப்புகளின் அடையாளங்களைவிட பெரியாரின் இலட்சியத்தை கொண்டு செலுத்தலே முதன்மையான பணியாக ஏற்றன என்பதை இந்தப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் அந்த இலட்சியத்தை அடையவே இயக்கம் என்ற பாதைமாறி, தங்கள் முந்தைய இயக்க அடையாளத்தை முன்னிறுத்தலே முதன்மை இலக்கு என்ற நிலை, பெரியார் திராவிடர் கழகத்திற்குள் உருவாக்கப்படுவதுதான் இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணமாகும். பெரியாரின் அடிப்படைத் தத்துவமான சாதிஒழிப்பு என்ற இலட்சியத்தையே தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக்கொண்டது. அதன்...

தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு விசித்திர வழக்கை சந்தித்திருக்கிறது. ‘பிராமணர்’களை எதிர்த்தும் அவதூறூகவும் பேசி வரும் தி.க. தலைவர் கி.வீரமணி, தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் “பிராமணருக்கு” எதிராகப் பேச தடைவிதிக்க உத்தரவிடவேண்டும் என்பது வழக்கு. வழக்கைத் தொடர்ந்தவர் சிவகாசியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற வழக்கறிஞர். விசாரித்த நீதிபதிகள் வி.இராம சுப்பிரமணியன், வி.எம். வேலுமணி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். “விமர்சனம் என்பது கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி கருத்துரிமைக்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. சரியான விமர்சனங்களை வரவேற்க வேண்டும். விமர்சனம் முறையற்றதாக நியாயமற்றதாக இருக்குமானால், ஒன்று அதை புறக்கணிக்கலாம். மற்றொன்று சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். விமர்சனம் எல்லை மீறினால் புத்தர் காட்டிய வழியில் அமைதி காக்கலாம். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சகமனிதர்களை தனது வைப்பாட்டி மக்கள், சூத்திரர்கள்...