Tagged: குமரி திவிக

குமரி மாவட்ட திவிக தோழர் செல்லம் மறைவு, உடல்தானம் 16062017

குமரி மாவட்ட விடுதலைக்காக மார்சல் நேசமணி தலைமையில்  போராடிய மொழிப்போர் போராளியும் தற்போதைய திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளருமான தோழர்.செல்லம், அகவை:80, தொடுகுளம், காஞ்சிரகோடு அவர்கள் 16062017 அன்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் வீரவணக்க நிகழ்வு கழகத் தோழர் அனீஸ் தலைமையில்  நடைப்பெற்றது. தோழர்கள் நீதி அரசர், தமிழ் மதி, மணிமேகலை, மார்த்தாண்டம் மாலை பத்திரிகை ஆசிரியர் தோழர் செபக்குமார், கிறித்துதாஸ் ஆகியோர் உடல் தானம் பற்றிய அறிவியல் செய்திகளை இரங்கல் செய்தியாக பேசினர். தோழர்கள் இளங்கோ, விஸ்ணு, சூசையப்பா, கருணாநிதி, ஜான் மதி, அருள் ராஜ், பிரேமலதா, இராசேந்திரன், கம்யூனிஸ்ட் தோழர் ஜெயன் ஆகியோரின் வீரவணக்க முழக்கங்களுடன், அவரின் இறுதி விருப்பப்படி  ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மருத்துவ உடற் கூறியல்த் துறைக்கு வழங்கப்பட்டது. அவருக்கு எங்களின் வீரவணக்கங்கள்

மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் ! குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்.. மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து. நாள் : 04.03.2017 சனிக்கிழமை,காலை 9 மணி. இடம் : வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,அண்ணா சிலை அருகில்,தக்கலை,குமரி மாவட்டம். கண்டன உரை : தோழர் பால்.பிரபாகரன், பரப்புரைச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள்

குமரி மாவட்ட தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

குமரி மாவட்டத்தில் அறிவுலகத் தலைவர் தந்தை பெரியாரின் 138 வது பிறந்த நாள் விழா குமரி மாவட்ட கழகம் சார்பாக மார்த்தாண்டம் ம.தி.மு.க அலுவலகத்தில் வைத்து கழகத் தோழர். சூசையப்பா தலைமையில் நடைப்பெற்றது. பொருளாளர் தோழர். மஞ்சுகுமார் வரவேற்புரையாற்றினார்.செயலாளர்.தோழர்.தமிழ் மதி ’பெரியாரியல் பற்றி கருத்துரையாற்றினார். கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பெ.தொ.க தலைவர்.நீதி அரசர் நன்றி கூறி முடித்தார்.  

குமரி மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பு அருகிலுள்ள நகராட்சி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்  வே.சதா தலைமை தாங்கினார். தோழர்கள் தமிழ் மதி, சூசையப்பா, நீதி அரசர், தமிழ் அரசன், மஞ்சுகுமார், ஸ்டெல்லா, விஸ்ணு, ஜாண்மதி, மற்றும்கழக தோழர்கள், ஆதரவாளர்கள், மக்கள்அதிகாரம் அமைப்பினர், சமூகநீதிக்கான சனநாயக பேரவை அமைப்பினர், மதிமுகவினர் கலந்துக்கொண்டு மத்திய அரசைக் கண்டித்து எதிர்ப்பு முழக்கம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

காதலர் தின விழா குமரி மாவட்டத்தில் சாதி ஒழிப்பு நாளாக கொண்டாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம்.சார்பாக மாவட்டத் தலைவர் வே.சதா தலைமையில் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை காலை10.00 மணிக்கு அவருடைய இல்லத்தில் காதலர் தின விழா சாதி ஒழிப்பு நாளாக கொண்டாடப்பட்டது. கழகத் தோழர்.தமிழ்மதி மற்றும் அவரின் வாழ்விணையர் தமிழ்ச் செல்வி ஆகியோர் கலந்துக் கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.தோழர்.தமிழ் மதி அவர்கள் ”சாதியை ஒழிக்கவே சாதி ஒழிப்பு நாள் என திராவிடர் விடுதலைக் கழகத்தால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது” என்று விளக்கி பேசினார். நிகழ்வில்; தோழர்கள் மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,சகிலா பொன் மலர்,அ.மணி கண்டன்,இராசேந்திரன்,சூசையப்பா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.