‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை இடஒதுக்கீடு குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான மருத்துவர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது மத்திய அரசின் முடிவாகும் என்று திட்டவட்டமாகத் தனது தீர்ப்பில் தெரிவித்துவிட்டது. எனவே, தமிழகத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக் காரணமாகத்தான், இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கும் காரணம், மக்களை ஏமாற்றுவதற்கும், சமூக நீதியைக் குழிதோண்டி புதைப்பதற்குமான ஒன்றே தவிர வேறல்ல. உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று தீர்ப்பளித்த பிறகு, ஜூலை 31 ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 114 மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளி வந்தது. அப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு கிடையாது என்று மத்திய அரசு கூறவில்லை. இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கும்,...