தலைநகரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் முற்றுகை!
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது என்று கருநாடக அரசு அறிவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பை ஏற்கக் கூடாது என்று கருநாடக காங்கிரஸ் ஆட்சியை மிரட்டி கலவரத்தை நடத்தி வருவது கருநாடக பா.ஜ.க.த்தான். கருநாடக முதல்வர் சித்தராமய்யா, மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க தாம் தயாராக இருந்தாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.தான்’ என்று சுட்டிக் காட்டியிருந்தார். மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மாநில பா.ஜ.க. தலைவரான எடியூரப்பா போன்றோர், உச்சநீதிமன்ற தீர்ப்பை கருநாடகஅரசு ஏற்கக் கூடாது என்று கன்னட வெறியோடு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை முற்றுகையிட்டு தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் போராட்டத்தை செப்.20 அன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தின. திராவிடர் விடுதலைக் கழகம், த.பெ.தி.க., தமிழ்ப் புலிகள் இயக்கம், மே 17, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்ப் புலிகள்...