Tagged: கமலஹாசன்

ஏழ்மையும்-சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம் – எச். ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி!

ஏழ்மையும்-சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம் – எச். ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி!

ஆட்சி அதிகாரம் வந்துவிட்டது என்ற திமிரில் எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் எல்லை மீறி தூற்றுகிறார்கள். வாய்க்கொழுப்பு பூணூல் திமிருடன் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். நடிகர் கமல்ஹாசன், தனது 61ஆவது பிறந்த நாளில் வெளியிட்ட சில கருத்துகளுக்காக ‘துக்ளக்’ பத்திரிகையில் எச். ராஜா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கமல்ஹாசன் பேசும் பகுத்தறிவு கருத்துகள் குழப்பம் மற்றும் பார்ப்பனியத்தின் கலவையாகவே இருக்கிறது என்பது வேறு சேதி. ஆனால், இந்த கடிதத்தில் எச்.ராஜா தன்னை அசல் பார்ப்பனராக அடையாளம் காட்டியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஒருவர் ஏழையாகவும் தீண்டப்படாத ஜாதியிலும் பிறப்பதற்கு முன் ஜென்மத்தின் பலன்தான் காரணம் என்று பார்ப்பனர்கள் கூறி, இந்த ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வந்தார்கள். பெரியாரி யக்கம், பார்ப்பனரின் இந்த பிறவித் திமிரைத்தான் கேள்விக்கு உட்படுத்தியது. கடவுளையும் ‘கடவுள்’ பெயரால் அதிகாரங்களையும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கப் பிடிக்குள் பறித்துக் கொண்டதை பெரியார் இயக்கம் கிழித்துக் காட்டியவுடன் பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வுகளை தாங்கள் ஏற்கவில்லை என்றும், ஜாதி...