Tagged: கடும் புலி வாழும் காடு

1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார் எல்லை மீறும் தீர்ப்புகள் இன்னும் தொடர்கின்றன!

1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார் எல்லை மீறும் தீர்ப்புகள் இன்னும் தொடர்கின்றன!

நீதிபதிகள் சில வழக்குகளில், சட்ட எல்லைகளைத் தாண்டி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து, அவர்களுக்கான அதிகார வரம்புகளை மீறுகிறார்கள்; நீதிபதிகள் சமுதாயத்தை வழி நடத்தும் தலைவர்கள் அல்ல! 1956ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆர்.எஸ். மலையப்பன் (இவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான ‘கள்ளர்’ வகுப்பைச் சார்ந்தவர்) – நிலக் குத்தகை தொடர்பான வழக்கில் நில பிரபுகளுக்கு எதிராக ஒரு தீர்ப்பு வழங்கினார். மேல்முறையீட்டில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு பார்ப்பன நீதிபதிகள், தீர்ப்பை இரத்து செய்ததோடு மாவட்ட ஆட்சித் தலைவரை கடுமையாக, “அவர் பதவியில் நீடிக்கவே தகுதியற்றவர். உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று பார்ப்பன வெறியுடன் தீர்ப்பு கூறினார். ‘இந்து’ பார்ப்பன ஏடு, தீர்ப்பை உச்சி மோந்து பாராட்டியது. பெரியார் கொதித்து எழுந்தார். மக்களைக் கூட்டிய பெரியார் பார்ப்பன நீதிபதிகளின் உள்நோக்கத்தை வன்மையாகக் கண்டித்தார். மக்கள் மன்றத்தில் தீர்ப்பு தீயிடப்பட்டது. பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு...