Tagged: எனது உணவு

மாட்டிறைச்சி – எனது உரிமை; எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

மதுரையில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் “மாட்டிறைச்சி – எனது உரிமை – எனது உரிமை “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முதலில் நிகழ்ச்சி நடத்த திட்டமிருந்த பள்ளி மைதானத்துக்குக் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப் பட்டதால், மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவ்ர் சாமுவேல்ராஜ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஷேக் மொய்தீன் மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் உரையாற்றினர்.