Tagged: எதிர்ப்பு மாநாடு

நெல்லையில் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு

அணு உலைப் பூங்கா என்பது, இரண்டுக்கும் மேற்பட்ட அணுவுலைகளை ஒரே இடத்தில் நிறுவுவதாகும். கூடங்குளத்தில் அமையவிருக்கும் 3,4,5,6 என்று அடுத்தடுத்து அணு உலை அமைக்க நினைக்கிறது அரசு. கூடங்குளத்தில் ஓர் அணு உலைப் பூங்கா அமைப்பதே திட்டம். அணு உலைப் பூங்காக்களால் போர், பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடரால் பேராபத்து  நிகழலாம். எனவே அணு உலை வேண்டாம் என்று தொடர்ந்து பல்வேறு பரப்புரைகளையும், போராட்டங்களையும் நடத்தி வரும், “அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” சார்பாக 03-12-2016 சனிக்கிழமை அன்று மாலை 3-00 மணி முதல் இரவு வரை, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள கிங்ஸ் சிக் அரங்கில் “கூடங்குளம் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு” நடைபெற்றது. அமெரிக்கா, ஜப்பான், இரஷ்யாவுடனான அணு ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும்; கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைப்பதையும், கல்பாக்கத்தில் விரிவாக்கம் செய்வதையும் கைவிட வேண்டும்;...