மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு! 24/25/6/17 தேதிகளில் நடைபெறும் மலேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு டத்தோசிரி டாக்டர் சுப்ரமணியம் அவர்கள் மாநாட்டைத் துவக்கிவைப்பார்! இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பேராளர்களாகப் பங்கேற்பு! ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்பெரும் மாநாட்டில் “திராவிட இனத்தின் மீட்சியே; தமிழ் இனம்! தமிழும் திராவிடமும் ஒன்றே!”யென கருத்தரங்கில் விவாதிக்கப்படும் ! இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் என்ற கருப்பொருளால் முன்னெடுக்கப்படும் இம்மாநாட்டு வழி உலகம் தழுவி வாழ்கிற தமிழ் உணர்வாளர்களை ஒரே குடையில் கீழ் கட்டமைக்க முடியுமென்ற சிந்தனையின் வெளிபாடே இம்மாநாட்டுக்குரிய இலக்காகும். அதனால் இம்மாட்டையொட்டி நடைபெறும் இரண்டுநாள் கருத்தரங்கில் பேராசிரியர், சுப வீரபாண்டியன், பேராசிரியர் அ.மார்க்சு, கருத்தாளர் சு.அறிவுக்கரசு, திரைஇயக்குனர் வேலுபிரபாகரன், கருத்தாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் ஆதவன், கருத்தாளர் தோழி ஓவியா, கருத்தாளர் விடுதலை ராசேந்திரன், கருத்தாளர் இளபுகழேந்தி, எழுத்தாளர் மஞ்சை வசந்தன், கருத்தாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் கலந்து விவாதிப்பதுடன் அவர்களுக்கு...