காஞ்சி மாவட்டத்தில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை
ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? நமது இளைய தலைமுறையின் கவனத்திற்க்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம்,தாழ்த்தபட்ட ஜாதிகளாக, பிற்படுத்தபட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன்,முப்பாட்டன், காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம். பார்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள்.அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது.உழைப்பு ,அடிமை வேலை ,குல தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமூதாயம் விதித்த காறாரான கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படி தகர்த்தோம். ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும்,அம்பேத்கரும் போராடிப் பெற்று தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை பெற்றதால் தகர்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதில் காமராசர் ஆட்சியில் தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்தது. அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின. ‘ஜாதி’ யை காட்டி, ‘படிக்ககூடாத ஜாதி’; ‘உழைக்க வேண்டிய ஜாதி’ என்றார்கள். அத்தகைய ஜாதி தடைகளை, அதே ஜாதி அடிப்படையில் கன்டறிந்து...