Tagged: இராம லீலா

‘இராம லீலா’வுக்கு எதிரான அசுரர்களின் கலகக் குரல்!

அறிவியல் ரீதியிலான ஆய்வுகளே இல்லாத காலத்திலேயே  பார்ப்பன புராணங்களை வாசித்து, தனது சொந்த புரிதலின் அடிப்படையில் அரசியல் உள்ளடக்கத்தை வழங்கியவர் பெரியார். பார்ப்பனியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அறிவுத் தளத்தோடு நின்றுவிடவில்லை. மக்கள் மத்தியில் இயக்கங்களாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன. ‘தேவ-அசுர’ப் பேராட்டத்தில் பார்ப்பனியத்துக்கு எதிரான ‘அசுர மரபு’ இன்னும் உயிர்த் துடிப்போடு பழங்குடி மக்களிடம் இருப்பதையும், பார்ப்பன மரபுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் நடத்திய மக்கள் இயக்கங்களையும் வரலாற்று பின்புலத்தோடு, படம் பிடிக்கிறது இக்கட்டுரை. அமர், அசுர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஜார்கண்ட் மாநில பழங்குடியினரிலேயே சிறுபான்மை யிலும் சிறுபான்மையினரான அசுர் பழங்குடியினத்த வரின் மொத்த மக்கள் தொகை சுமார் 26,500. அம் மக்கள் இன்றும் தங்களை அசுர வாரிசுகளாகக் கருதிக்  கொள்கின்றனர். அங்கே மகிஷாகர், அசுர்களின் மூதாதையர்., மகிஷன், இராவணன், சம்பூகன் போன்றோரின் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்த வழிந்தோடிய குருதி, தொன்மங்களாகவும் இனக் குழுச் சடங்குகளாகவும் இன்றும் பழங்குடி மக்களின்...

திராவிடரை இழிவுப் படுத்தும் ‘இராம லீலா’ ‘இராமன்’ – நன்மையின் உருவமா? பெரியார்

திராவிடரை இழிவுப் படுத்தும் ‘இராம லீலா’ ‘இராமன்’ – நன்மையின் உருவமா? பெரியார்

நன்மையின் உருவம் ‘இராமன்’; தீமையின் உருவம் ‘இராவணன்’ என்று கூறி, டெல்லி இராம் லீலா மைதானத்தில், இராவணன் உருவத்தை எரிக்கிறார்கள். இராமன் குறித்து பெரியார் எழுப்பும் இந்த கேள்விகள் இராமன் யோக்கியதையை உணர்த்தும். கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்குச் ‘சுல்கமாக’க் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும் இராமனுக்கு நன்றாய்த் தெரியும். நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும், குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். பரதன் ஊரில் இல்லாத சமயத்தில் பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான். இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது செய்து கெடுத்து விடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, ‘இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப் போகிறாய்’ என்று ‘தாஜா’ செய்கிறான். பட்டாபிஷேகம் நடக்குமோ, நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். ‘நாடு உனக்கு இல்லை;...