அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை இலங்கைக்கு அனுப்பும் ஆஸ்திரேலியாவுக்கு கண்டனம்
அடைக்கலம் தேடி வந்த ஈழத் தமிழர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல், அவர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வருகிறது ஆஸ்திரேலிய அரசு. உயிருக்கு உறுதியில்லாமல் ஈழத் தமிழர்கள் அச்சத்தால் பரிதவிக்கிறார்கள். அடைக் கலம் தேடி ஆஸ்திரேலியா வந்த 46 தமிழர்களை சிறையிலடைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு, இப்போது, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்திய அரசு, இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுதும் தமிழர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த ஈழத் தமிழர்கள் 5 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைபட்டுள்ள ஈழத் தமிழர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி, கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். சிலர் மனைவி, குழந்தைகளுடன் நான்கு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இராஜபக்சேவை தீவிரமாக ஆதரித்துப் பேசிவர் ஆஸ்திரேலிய பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. சில சூழ்நிலைகளில்...