Tagged: இரங்கல் செய்தி

பெரியார் மறைவு – தலைவர்கள் இரங்கல் தொகுப்பு

பெரியார் இறந்த போது பல தலைவர்களும் பத்திரிக்கைகளும் வெளியிட்ட இரங்கல் செய்தியை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் தென்மொழி இதழில் சுருக்கமாக தொகுத்து வெளியிட்டார். கடைசியில் அவர் ஆசிரியர் குறிப்பாக எழுதியது முக்கியமான ஒன்று. பெரியார் மறைவுக்குப் பின்னர் அவரைப் பற்றிய பலரின் கருத்துரை * கவர்ச்சி மிக்கத் தலைவர். எப்பொழுதுமே போராடியவர் – குடியரசுத் தலைவர் வி.வி.கிரி. * ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர் – தலைமை அமைச்சர், இந்திராகாந்தி * நாடு மாபெரும் புரட்சியாளரை இழந்து விட்டது. வாழ்க்கை முழுவதும் இந்து குமுகாயத்தில் புரட்சியான மாறுதலை உண்டாக்கியவர் பெரியார் – நடுவணரசு அமைச்சர். செகசீவன்ராம். * இடைவிடாமல் சாதிக் கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராடிய வீரர் – நடுவணரசு அமைச்சர். சி.சுப்பிரமணியம் *ஈ.வெ.இரா. ஆர்வமிக்க குமுகாயச் சீர்திருத்தக்காரர் – தமிழக ஆளுநர். கே.கே.சா. *குமுகாயச் சமநிலைக்காக அரும்பாடுபட்ட பெரியாரைத் தமிழகம் என்றும் மறக்காது –...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தங்கை முடிவெய்தினார்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தங்கை முடிவெய்தினார்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உடன் பிறந்த தங்கை திருமதி எஸ்.எம்.டி. சரோஜா (65) அவர்கள் 15.09.2016 அதிகாலை 4 மணியளவில் உடல் நலக் குறைவின் காரணமாக முடிவெய்தினார். இறுதி நிகழ்வு 15.09.2016 மதியம் 2 மணியளவில் மேட்டூர் அணை (ஆர்.எஸ்), தங்கமாபுரிபட்டிணத்தில் நிகழ்ந்தது. ஏராளமான தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 29092016 இதழ்