Tagged: ஆர்எஸ்எஸ் அலுவலகம் முற்றுகை

மதவெறி பண்பாடு, இப்படித்தான்!

மதவெறி பண்பாடு, இப்படித்தான்!

காவிரி நீர் உரிமைக்காக சென்னையில் பெரியாரிய-அம்பேத்கரிய-மனித உரிமை, தமிழ்தேசியம், பொதுவுடைமை இயக்கங்கள் ஒன்றிணைந்து சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை செப்.20 அன்று நடத்தின. கைது செய்யப்பட்ட தோழர்களை காவல்துறை கொண்டு சென்ற  கீழ்ப்பாக்கத்திலுள்ள திருமண மண்டபம் எது தெரியுமா? அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களும் ‘பிராமணர்’ களிலேயே மிகவும் உயர்வானவர்கள் என்று உரிமை கொண்டாடும் ‘சரசுவதி பிராமணர்களுக்கான’ திருமண மண்டபம். அந்த மண்டபத் தின் முதல் மாடியிலேய ‘சரசுவதி பிராமணர்’ சங்கத்துக்கான அலுவலகம் இயங்குகிறது. 500க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மண்டபத்தின் தாழ்வாரத்திலேயே நிற்க வைக்கப்பட்டனர். மண்டபத்தை திறந்துவிட நிர்வாகிகள் மறுத்தனர். தோழர்கள் போராட்டத்துக்குப் பிறகே காவல்துறை தலையிட்டு மண்டபத்தை திறந்து விட முன் வந்தார்கள். உள்ளே மின் விளக்கு, மின் விசிறி போட மறுக்கவே அதற்கும் போராட்டம். அதன் பிறகே மின்சார இணைப்பை தந்தார்கள். ‘கழிவறை’களை மூடி விட்டனர். அவ்வளவு கூட்டத்துக்கும் ஒரே ஒரு...

தலைநகரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் முற்றுகை!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது என்று கருநாடக அரசு அறிவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பை ஏற்கக் கூடாது என்று கருநாடக காங்கிரஸ் ஆட்சியை மிரட்டி கலவரத்தை நடத்தி வருவது கருநாடக பா.ஜ.க.த்தான். கருநாடக முதல்வர் சித்தராமய்யா, மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க தாம் தயாராக இருந்தாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.தான்’ என்று சுட்டிக் காட்டியிருந்தார். மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மாநில பா.ஜ.க. தலைவரான எடியூரப்பா போன்றோர், உச்சநீதிமன்ற தீர்ப்பை கருநாடகஅரசு ஏற்கக் கூடாது என்று கன்னட வெறியோடு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை முற்றுகையிட்டு தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் போராட்டத்தை செப்.20 அன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தின. திராவிடர் விடுதலைக் கழகம், த.பெ.தி.க., தமிழ்ப் புலிகள் இயக்கம், மே 17, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்ப் புலிகள்...

தமிழின எதிரி R.S.S. அலுவலகம் முற்றுகை சென்னை 20092016

கர்நாடகாவில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய தமிழின எதிரி “ஆர்.எஸ்.எஸ்”சை கண்டித்து கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாள்கள், தோழர்கள் 500 பேர் கைது! இன்று 20.09.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கர்நாடகாவில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் ன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தலைமை அலுவலகம் முற்றுகை. கைது செய்யப்பட்ட அரங்கில் காஞ்சி மக்கள் மன்ற தோழர்களின் எழுச்சியான புரட்சிகர கலை பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன