Tagged: அந்திமழை

என்னை சுய ஜாதிக்குள் அடைத்து விடாதீர்கள்! ‘நான் ஜாதியற்றவன்’ – ப.ரஞ்சித்

பெரியாரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்று சிலர் வைக்கும் குற்றச் சாட்டை எப்படி எதிர் கொள்கிறீர்கள்? அம்பேத்கர் குறித்த உரையாடல் எதுவும் இங்கு நிகழவில்லை. இரட்டை மலை சீனிவாசனையும் எம்.சி. ராஜாவையும் இங்கு யாருக்கும் தெரியாது. ஆனால், பெரியார் தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் அறிமுகமானவர். யாருக்கும் தெரியாதவர்களை ஒரு போட்டோவாகவாவது  அறிமுகப்படுத்த வேண்டுமென எண்ணுகிறேன். அதன் விளைவே  இவர்களின் படங்களை வைத்தது. என் தாத்தா ஒரு  பெரியாரிஸ்ட்தான் . பெரியாரை காண்பிக்கக்கூடாது என்று ஒருபோதும் எண்ணியதில்லை. என் அடுத்த ஸ்கிரிப்டான  ‘சார்பட்டா பரம்பரை’யில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை பெரியாரிஸ்டாகத்தான் எழுதியிருக்கிறேன். படம் வரும்போது தெரியும். எனக்கு பெரியாரைப் பிடிக்கும் என்று எல்லா இடங்களிலும் தொடர்ந்து  சொல்கிறேன். எனக்கு  திராவிட இயக்கங்கள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் பெரியார் மீது ஒரு விமர்சனமும் கிடையாது. சரியான வாய்ப்பு வரும் போது இதைப் புரிந்து  கொள்வார்கள் என நம்புகிறேன். சமூக வலைத்தளங்களில் கபாலியை ஒட்டி உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வரும் விமர்சனங்களை எப்படிப்...

நடிகர் சத்தியராஜ் பேச்சு: பெரியாரைத் தவிர்த்துவிட்டு எந்த சமூக மாற்றத்தையும் செய்ய முடியாது

நடிகர் சத்தியராஜ் பேச்சு: பெரியாரைத் தவிர்த்துவிட்டு எந்த சமூக மாற்றத்தையும் செய்ய முடியாது

‘அந்தி மழை’ மாத இதழில் எழுத்தாளர் பாமரன் ‘சொதப்பல் பக்கம்’ என்ற பெயரில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு ‘சொதப்பல்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்ச்சி 16.2.2014 ஞாயிறு மாலை 6 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்றது. நடிகர் சத்தியராஜ், விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அந்தி மழை’ நிறுவனர் இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். நிர்வாக ஆசிரியர் என். அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் இரா. சுப்பிர மணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பாமரன் ஏற்புரை நிகழ்த்தினார். நடிகர் சத்தியராஜ் தமது உரையில் : அடுத்த ஆண்டு தனக்கு 60 ஆம் ஆண்டு திருமணம் நடத்த வேண்டும் என்று குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தக் கருத்தை, தான் மறுத்துவிட்டதாகவும்,  தனது மனைவிக்கு 60 வயது நிறைவு பெறும்போது அதை சுயமரியாதைத் திருமணமாக நடத்துவேன் என்றும் அறிவித்தார். ஆணுக்கு 60  வயது நிறைவு பெற்றால்தான்...

பேரறிவாளன் மனம் திறக்கிறார்!

பேரறிவாளன் மனம் திறக்கிறார்!

வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து, தமிழக அரசின் விடுதலை முயற்சி, தன் தாய் அற்புதம்மாளின் போராட்டம் பற்றி பல கேள்விகளுக்கு வழக்கறிஞர் மூலம் விடை அளிக்கிறார். அரசியல் சாசன அமர்விற்கு உங்கள் விடுதலை வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? அரசியல் சாசன அமர்வில் நீதியரசர்கள் யார் யார் பங்கு பெறப் போகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருப்பினும் தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு இதில் எவ்வகையான நிலைப்பாடு எடுக்க உள்ளது என்பதையே நான் மிக ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். காரணம் தண்டனை குறைப்பு அதிகாரம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என நன்கு தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக சென்ற காங்கிரசு மத்திய அரசு தமிழக அரசின் முடிவை எதிர்த்தது – வழக்கு தொடுத்தது. தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு மாநில உரிமைகளை மதிக்கிற அரசாக...