Tagged: பெரியார்

சென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியா? திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை

பூணூலை அறுத்ததாக குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தந்தைபெரியார் படத்தைக் கொளுத்தியும் ஆபாசமாக பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம், வீதி மன்றத்தை நாடும் திராவிடர் கழகம்! சென்னையில் பூணூல் அறுத்ததாகக் கூறி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஆறு பேர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் மத்திய-மாநில அரசுகளால் கவுரவிக்கப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்தை எரித்தும், ஆபாசமாகப் பேசியும் செயல்பட்ட பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் மீதும், அவரைச் சார்ந்தவர் மீதும், புகார் செய்தும், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உடனடியாக எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை யும், வீதி மன்றத்தையும் அணுகி திராவிடர் கழகம் செயல்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, 10.10.2015 அன்று விடுத்துள்ளஅறிக்கை...