குடி  அரசு  ஆபீஸ்  சோதனை

 

20135ந்  தேதி  ஞாயிற்றுக்  கிழமை  பகல்  ஒரு  மணி  சுமாருக்கு  சென்னை  அரசாங்கத்தாரால்  அனுப்பப்பட்ட  ஒரு  இ.ஐ.ஈ.  போலீஸ்  அதிகாரி,  உள்ளூர்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்,  சப்  இன்ஸ்பெக்டர்,  இரண்டு  மூன்று  ஹெட்கான்ஸ்டேபிள்கள்  பத்துப்  பனிரண்டு  கான்ஸ்டேபிள்களுடன்  குடி  அரசு  ஆபீசுக்குள்  புகுந்து  ஆபீசைச்  சுற்றியும்,  ஆபீசுக்குள்  இருந்த  ஆளுகளுக்கும்  காவல்  போட்டு  விட்டு  ஒவ்வொரு  அரையையும்  ஒவ்வொரு  ரிகார்டுகளையும்  பரிசோதித்தார்கள்.  அங்கு  ஒன்றும்  அவர்கள்  இஷ்டப்படி  கிடைக்காததால்  பகுத்தறிவு  நூற்பதிப்புக்கழக  நிலயத்துக்குள்  புகுந்து  அங்கும்  அதுபோலவே  பதினாயிரக்கணக்கான  புத்தகங்களையும்,  புத்தகக்கட்டுகளையும்  கலைத்து  விட்டார்கள்.  அங்கும்  ஒன்றும்  கிடைக்கவில்லை.

பிறகு  தோழர்  ஈ.வெ.கி.  அவர்கள்  வீட்டிற்குச்  சென்று  அங்கும்  பல  புத்தக  அலமாரிகளைத்  திறந்தும்  மற்ற  இடங்களையும்  சுற்றிச்  சுற்றி  சோதனை  போட்டும்  ஒன்றும்  கிடைக்கவில்லை.

கடைசியாக  பகத்சிங்கைப்  பாராட்டி  தோழர்  ஈ.வெ.ராவால்  எழுதப் பட்ட  ஒரு  கட்டுரை  அடங்கிய  குடி  அரசு  மலர்  ஒன்றை  எடுத்துக் கொண்டு  சென்று  விட்டார்கள்.  1  மணி  முதல்  4  மணி  வரை  சோதனைகள்  நடந்தன.  “”நீ  செய்திருக்கா  விட்டாலும்  உன்  பாட்டனார்  செய்திருப்பார்”  என்கின்ற  நீதி  கொண்டாவது  தோழர்  ஈ.வெ.ராவையும்  குடியரசு  பத்திரிகையையும்  ஒழிக்கவேண்டியது  நமது  அரசாங்கத்துக்கு  அவசியமேற்பட்டு விட்டதாகத்  தெரிகிறது.  நடக்கிறபடி  நடக்கட்டும்.  எல்லாம்  அ….  செயல்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  27.01.1935

You may also like...