வினாக்கள்… விடைகள்…!

10 வேதகால அரசர்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை நடிகர் கமலஹாசன் வெளியிட்டார். – செய்தி
ஏனய்யா, நீச பாஷையில் எழுதினீர்? சம° கிருதத்திலேயே எழுதியிருந்தா, விற்பனை இலட் சக்கணக்கில் பிச்சுண்டு போயிருக்கு மோன்னா…

அடிப்படையில் தமிழ்ச் சமுதாயம் பெண்மையைப் போற்றும் சமுதாயமாகும். – மருத்துவர் இராமதாசு
உண்மை! உண்மை! யாருக்காவது சந்தேக மிருந்தால் தர்மபுரி திவ்யாவைக் கேட்டு தெளிவு பெறலாம்!

வண்டலூர் பூங்காவிலிருந்து புலி தப்பியது. கிராம மக்கள் பீதி. – செய்தி
பயப்படாதீங்க! தமிழ்நாட்டில் புலி பயங்கரவாதம் தலைதூக்கிடுச்சின்னு சுப்பிரமணியசாமி நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு காப்பாத்திடுவார்!

தமிழ்நாட்டில் 1442 அரசு மகளிர் பள்ளிக்கூடங் களிலும், 4278 ஆண்கள் பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறைகளே இல்லை. – உயர்நீதிமன்றம்
எத்தனையோ ஆயிரம் பிளாட்பாரங்கள் கோயிலே இல்லாமல் இருக்கு; பெருசா பேச வந்துட்டாங்க!

‘முத்த’க் கலாச்சாரத்தைக் கண்டித்து ‘எச்சில் துப்பும்’ போராட்டம் நடத்திய இந்து முன்னணி யினர் கைது. – செய்தி
‘எச்சில் துப்பும்’ கலாச்சாரத்தைவிட முத்தக் கலாச்சாரம் எவ்வளவோ மேலானது!

அயோத்தியில் ‘இராமன்’ கோயில் கட்ட பிரதமர் மோடி ஏற்பாடு செய்ய வேண்டும்.
– உ.பி. ஆளுநர் ராம் நாயக்
இவுக எல்லாம் ‘இராமன்’ ஆண்ட கலியுகத் துலேயே கவர்னர் பதவிக்கு வந்திருக்க வேண்டியவக! அறிவாளிக!

காஷ்மீரில் 3 அப்பாவி இளைஞர்களை தீவிர வாதிகள் என்று கூறி போலி என்கவுண்டர் நடத்திய 7 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை.- செய்தி
மகிழ்ச்சி; ஆயுள் தண்டனையும் போலியாகிடாம கவனிச்சுகுங்க…

பெரியார் முழக்கம் 20112014 இதழ்

You may also like...

Leave a Reply