கோட்சேயின் சமூகப் பின்னணி

கோட்சேயின் குடும்பத்தில் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட நிலையில், அது பிறக்காத சூழலில் கோட்சேயை பெண் குழந்தையாக பாவித்து மூக்குத்தி மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஆடைகளை அணிவித்து வளர்க்கப்பட்டார். இதனால் கோட்சேயின் பாலின அடையாளம் குழப்பமாகி அது அவருக்கு சிக்கலான இளம் பருவமாக இருந்தது. அரசியலிலும் சமூகத்திலும் ஆதிக்கத்திலேயே இருந்து வரும் சித்பவன் சாதிக் குடும்பம், திடீரென வறுமையில் வீழ்ந்தது. அதிகாரமில்லாததால் ஏற்பட்ட விரக்தியும், பாலின அடையாளச் சிக்கலும் சேர்ந்து கொண்டு அவனது ஆண்மைத் தன்மையை நிரூபிக்கும் பொருட்டு அவனை ஒரு தீவிரவாதியாக மாற்றியிருக்கலாம் என்று அரசியல் உளவியலாளர் ஆசிஸ் நந்தி, ‘உளவியலின் விளிம்பு’ (எட்ஜ் ஆப் சைக்காலஜி) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“பெண்கள் தனக்கு முன்னால் நிற்பதையே வெறுப்பவர். கடுமையான தலைவலியால் வாழ்நாள் முழுவதும் அவதிப்பட்டவர். ஒருமுறை இந்தத் தலைவலியால் அவதிப்பட்டபோது மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். கண்விழித்துப் பார்த்த போது தனக்கு ‘பெண் நர்சுகள்’ பணிவிடை செய்தது தெரிந்தது! உடனே ஆத்திரமடைந்து மருத்துவ மனையிலிருந்து வெளியே ஓட்டம் பிடித்தார்!
பார்ப்பன தர்மத்தில் அழுத்தமான பிடிப்பு உண்டு; “பிரம்மச்சரிய” விரதத்தை மேற்கொண்டவர். ஆனால், இவரது அரசியல் ஞானத் தந்தை வீரசவர்க்காரோடு மட்டும் இவருக்கு உடல்உறவு (Home sexual) உண்டு!
தகவல்: ‘நள்ளிரவில் வந்த சுதந்திரம்’ நூல்

பெரியார் முழக்கம் 08012015 இதழ்

You may also like...

Leave a Reply