புதிய பொறுப்பாளர்கள் நியமனம் சங்கராபுரத்தில் மாவட்டக் கலந்தாய்வு!

சங்கராபுரத்தில் உள்ள பெரியார், அம்பேத்கர் சிலைக்கு 28/09/2026 திங்கட்கிழமை காலை 11.00 மணி அளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். வாசவி மண்டபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும், புரட்சிப் பெரியார் முழக்க சந்தா சேர்த்தல் தொடர்பாகவும், மாவட்டக் கழக கட்டமைப்பு, நிதி சேர்த்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
கழகத் தலைவர் பேசுகையில் நாம் இயக்கத்தை வளர்த்தல் என்பது புதிய சமூதாயமாக,வளர்ச்சியடைந்த சமூதாயமாக, சமத்துவ சமூதாயமாக மாறுவதற்கு நம்முடைய பங்களிப்பு என்ன என்பதுதான். எனவே தோழர்களே மிகுந்த அக்கறையோடு செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்துப் பேசினார். இந்நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்க சந்தாவாக ரூ.4500 கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகம் சார்பாக வழங்கினர். தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் முன்னிலையில் கழக மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளை கழகத் தலைவர் அறிவித்தார்.

க.மதியழகன் (மாவட்டத் தலைவர்), க.ராமர் (மாவட்டச் செயலாளர்), ந.வெற்றிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்), மு.நாகராஜ் (மாவட்ட அமைப்பாளர்), மா.குமார் (ரிஷிவந்திய ஒன்றியத் தலைவர்), தே.ராமச்சந்திரன் (ரிஷிவந்திய ஒன்றியச் செயலாளர்), கி.ஆனந்தன் (ரிஷிவந்திய ஒன்றிய அமைப்பாளர்), அன்புரவி, (சங்கராபுரம் ஒன்றியச் செயலாளர்), இரா. கார்மேகம் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), மு.குமரேசன், (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), ச.கு.பெரியார் வெங்கட் (மாவட்டத் துணை அமைப்பாளர்), இரா. வீரமணி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருவண்ணாமலை), மு.சங்கர் (கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர்) தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்கள்: கு.பாபா, செ.வே.ராஜேஷ், இரா. ஜீவா, (மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர்), சா. சூ.அறிவு (எ) ஏதுசாமி (மாணவர் கழக கடுவனூர் கிளை அமைப்பாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15102026

You may also like...