‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா: தோழர்களின் பாராட்டத்தக்க செயல்பாடு

  • ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு பெயர் சொல்ல விரும்பாத ஒரு வாசகர் ரூ. 5,000/- நன்கொடையாக வழங்கியுள்ளார். முகநூல் வழியாக வெளிநாட்டிலிருந்து கழக ஏட்டைப் படித்து வரும் அவர், ‘வாட்ஸ்-அப்’ வழியாகக் கழகம் விடுத்த வேண்டுகோளைப் பார்த்து இந்த நன்கொடையை அனுப்பியுள்ளார். அவருக்கு நன்றி செலுத்துகிறோம்.
  • திருச்செங்கோடு தம்பி தேனீர் விடுதி உரிமையாளரும் கழகத் தோழருமான மு. சோமசுந்தரம், மாதம் ரூ.1000/- நன்கொடை யாக கழக ஏட்டுக்கு 2019 ஜனவரியிலிருந்து அனுப்பி வருகிறார். கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு கொரானா பாதிப்பு காரணமாக நன்கொடை அனுப்ப இயலாத நிலையில் இப்போது விடுபட்ட நிதியோடு மேலும் ரூ.4000/- சேர்த்து, ரூ.10,000/- நன்கொடையாக அனுப்பியுள்ளார். தோழரின் நன்கொடைக்கு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சார்பில் நன்றி கூறுகிறோம்.
  • கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தோழர்கள் 32 இதழ்களுக்கு சந்தா சேர்த்து முகவரிகள் பட்டிய லுடன் ரூ.5,800 அனுப்பியுள்ளனர். கள்ளக்குறிச்சி கழகத் தோழர்களுக்கு நன்றி.

பெரியார் முழக்கம் 14012021 இதழ்

You may also like...