பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற எச் இராஜாவின் முகநூல் பதிவிற்கு கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கண்டனம்
தமிழ்நாட்டில் 99 விழுக்காடு மக்களுக்கு எதிராக பெரியார் பேசினார். ஆனால் தனக்கு எதிராக பேசினாலும் பலருக்கு அவர் தான் பாதுகாவலர் என்ற அடிப்படையில் தான் தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்
எச். இராஜாவின் இப்படிப்பட்ட பேட்டிகள் ஒருவேளை அவர் எந்த இனத்திற்காக நிற்கிறாரோ அந்த இனத்திற்கே ஆபத்தாக வந்துவிடலாம் என்பதால் அந்த இனத்தை சார்ந்தவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
தயவுசெய்து இராஜாவிற்கு அறிவுரை சொல்லுங்கள் அமைதியாக இருக்க சொல்லுங்கள் நீங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பாக கூடும் என்பதால் இந்த இடத்தில் மக்களிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்