123 நாடுகளில் பெரியார் சிலை குறித்து தேடல்கள்

உலக அளவில் சிலை என்று தேடினால், இணையத் தேடலில் இடம்பெறும் முதன்மை வார்த்தையாகப் ‘பெரியார் சிலை’ உள்ளது. 6 கண்டங்கள், 123 நாடுகளில் சிலை குறித்த தேடல் கடந்த

4 நாள்களில் அதிகம் இடம் பிடித்துள்ளது. தேடல் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் சிலை குறித்து அதிகம் தேடிய நாடுகளாகச் சீனா, நேபாளம், இரான் ஆகிய நாடுகள் உள்ளன.

சிலை குறித்த தேடலில், திரிபுரா லெனின் சிலை, பெரியார் சிலை, யார் லெனின் போன்றவை உலக அளவில் தேடப்பட்டுள்ளன. இந்திய அளவிலான தேடலிலும் இதே முடிவுகள்தான் பிரதிபலித்தன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பெரியார் குறித்துத் தேடியுள்ளன.

பெரியார் முழக்கம் 15032018 இதழ்

You may also like...