மேட்டூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா
மேட்டூர் சதுரங்காடி பெரியார் திடலில் 22.7.2017 அன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசர் 115ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் பாரூக் நினைவு மேடையில் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘மாற்றம்’ நாடகக் குழுவினர் நாடகம், தற்பொழுது பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டியது. அதனைத் தொடர்ந்து மழலையர்களின் நடனம் நடைபெற்றது. அவர்களுக்கு மேடையில் பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்திற்கு மேட்டூர் நகர செயலாளர் அ.சுரேசு குமார் தலைமை தாங்க, நங்கவள்ளி அன்பு உரைக்குப் பின் வே மதிமாறன், காமராசரைப் பற்றி சிறப்புரையாற்றினார். காவேரிகிராஸ் பகுதி காளியப்பன் நன்றியுரை கூற கூட்டம் முடிவுற்றது.
மேட்டூரின் முக்கியப் பகுதிகளில் விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கழகக் கொடிகள் நகரமெங்கும் நடப்பட்டிருந்தன. கூட்டத்தில் அதிகளவு மக்கள் உரைக் கேட்டு தெளிவு பெற்றனர். இறுதியாக அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. தோழர்களும் பொறுப்பாளர்களும் பெருமளவு கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 24082017 இதழ்