‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள்!

‘திராவிட இயக்கம்’ என்ற பொது அடையாளத்தின் கீழ் பல்வேறு அரசியல் கட்சிகளையும் கொண்டு வந்து, ‘திராவிட’ என்ற சொல் ஆராய்ச்சியில் இறங்கி இது ‘தேவையற்ற பெயர்’, ‘காலாவதியான தத்துவம்’ என்ற வாதங்களை முன் வைப்பது வழக்கமாகிவிட்டது. 1944இல் திராவிடர் கழகத்தை பெரியார் உருவாக்கினார். இது ஓர் இயக்கம். 1949இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். அது இயக்கமல்ல; அரசியல் கட்சி; 1972இல் எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க.வை உருவாக்கினார். 1994இல் தி.மு.க.விலிருந்து -வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். இவை எல்லாமுமே அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை நோக்கி செயல்படுகின்றன. பெரியார் இயக்கங்கள் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண்ணுரிமை இதற்கு தடையாக நிற்கும் பார்ப்பனியம், வேத மதத்தை ‘இந்து’ என்ற பெயரில் வெகு மக்கள் மீது திணிக்கும். கோட்பாடுகளை எதிர்த்து மக்கள் மன்றத்தில் போராடி வருகின்றன. பெரியார் பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளத்துக்காகவும், பார்ப்பனியத்தால் உரிமை மறுக்கப்பட்டவர்களான இஸ்லாமியர் கிறிஸ்தவர்களை ஒரே  குடையின்கீழ் கொண்டு வருவதற்கும் தேர்வு செய்த பெயர் ‘திராவிடர்’. ஆனால், திராவிட கருத்தாக்கம் என்பது கேரளா, ஆந்திரா, கன்னடர்கள் மீது தமிழ் மேலாதிக்கத்தை முன் வைக்கும் சொல் என்று ‘தமிழ் இந்து’ நாளேடு எழுதுகிறது. மற்றொரு தரப்பினர், ‘திராவிடம்’ பேசி -கேரளா, கன்னடா, ஆந்திரர்களிடம் தமிழர் உரிமைகளை அடகு வைத்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர். ‘திராவிட’ என்ற பெயர் அடையாளத்தைத் தாங்கி நிற்கும் இயக்கமானாலும், கட்சிகளானாலும், அதன் கொள்கை அறிக்கையிலோ, நடைமுறையிலோ, அல்லது தேர்தல் அறிக்கையிலோ தமிழக உரிமைகள் அல்லாது, அண்டை ‘திராவிட’ மாநிலங்களின் உரிமைகளைப் பேசி இருக்கின்றனவா? ‘தமிழ்’ மேலாதிக்கத்தை-ஏனையமாநிலங்கள்ஏற்கவேண்டும்என்றுவலியுறுத்தியிருக்கிறதா? நிச்சயமாக இல்லை. பெயரில் அடையாளச் சொல்லாக ‘திராவிடம்’ இருப்பது என்பது மட்டுமே தான்இன்றுதமிழகம் இழந்து நிற்கும் அனைத்து உரிமைகளுக்கும் காரணம் என்று முடிவுக்கு வந்து விட முடியுமா?

‘பிராமணர்களை திராவிட இயக்கம் உள்ளிழுக்க வேண்டும்’ என்ற மற்றொரு கருத்தை முன் வைக்கிறது அதேநாளேடு. அதே ஏடு, ஜெயலலிதா என்ற பார்ப்பனரே திராவிட இயக்கத்துக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டு, பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை தோற்றுப் போய்விட்டது என்றும் எழுதுகிறது. ஏன் இந்த முறண்பாடு? ‘திராவிடம்’ என்ற சொல், எவரையும் இழிவுபடுத்தக் கூடியது அல்ல. ஆனால், ‘பிராமணர்’ என்ற சொல்லும், ‘பிராமணர்’ என்பதற்கான அடையாளங்களும், ஏனைய பெரும்பான்மை சமூகத்தினரை, ‘சாஸ்திரம்-சமூக’க் கண்ணோட்டங்களில் இரண்டாம்தர குடிமக்களாகவே பிரகடனப்படுத்துகிறது. கடவுளிடம் நேரடி தொடர்புக்குரிய தகுதிகளையும் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்றம் வரை சென்று அதன் அங்கீகாரத்தையும் பெற்று வைத்திருக்கிறார்கள். ‘திராவிடம்’சொல் ஆராய்ச்சியாளர்கள் இந்த‘பிராமணியத்துக்குள்’அடங்கியுள்ள ஆதிக்கக்கருத்தியலை கண்டிக்க முன்வராதது ஏன்?  ‘பிராமணியம்’ காலத்துக்கு ஒவ்வாதது என்று இடித்துக் கூற எது அவர்களைத் தடுக்கிறது? திராவிட அரசியல் கட்சிகள் பெரியாரின் திராவிடர் இயக்க கோட்பாடுகளிலிருந்து விலகிப் போய்விட்ட பிறகும், அரசியல் கட்சிகளையும் இயக்கத்தையும் ஒன்றாக்கி குழப்பமான கருத்துக்களை எழுதியும் பேசியும் வருவது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய லெனினியக் கட்சி, அந்த அமைப்பிலிருந்து வெளியேறிய தனித்தனிப் பிரிவுகள், எல்லாவற்றிலும் ‘கம்யூனிஸ்ட்’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதாலேயே அனைத்துக் கட்சிகளையும் ஒன்றே போல் கருதி விமர்சிக்க முடியுமா? “தேவரியம், கவுண்டரியம், நாயுடுவியம், வன்னியரியம், நாடாரியம் என்று பல முகங்களில் இன்று நிற்கிறது‘பிராமணியம்’”என்றும் அந்த நாளேடு எழுதுகிறது. மறுக்கமுடியாத உண்மை. இந்த ‘ஈயங்களை’ எதிர்க்க வேண்டும் என்பதிலும் அவை உயிர் பெற்று நிற்பதற்கான அடித்தளம்“பிராமணியத்தில்”இருக்கிறது என்பதும் தான் பெரியாரியம். இந்தநிலையில், ‘பிராமணியத்தை’கைவிடாத‘பிராமணர்களை’எப்படி உள்ளிழுத்துக் கொள்ளமுடியும்? தலித்துகள், முஸ்லீம்கள்  இருபிரிவினரும் அதிகாரமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. திராவிட அரசியல் கட்சிகள் இந்த மக்களை அதிகாரமயப்படுத்தல் குறித்து கவலைப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. பெரியார்இயக்கங்கள் குறிப்பாகதிராவிடர்விடுதலைக் கழகம், தலித் இஸ்லாமியர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு முகம் கொடுத்தே வருகிறது. ஆனால் இஸ்லாமியர்களை ‘அன்னியர்’களாகவும், ‘பகைவர்’களாகவும் பார்க்க வேண்டும் என்பதையே கொள்கையாகவே ஏற்றுள்ள சங்பரிவாரங்களை எதிர்ப்பதில் திராவிட இயக்கங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அந்த ஏடு ஏன் வலியுறுத்தாமல், பின் வாங்குகிறது?

கட்டுரை வெளி வந்த ஏட்டின் பெயர் ‘தி இந்து’; பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கி ஒரு நூற்றாண்டு கடந்த பிறகும், அதே மதப் பெயரையே அந்த ஏடு தாங்கி நிற்பதால், அதை இந்துக்களுக்கான ஏடு என்று கட்டுரையாளர் எழுதுவாரா? சரி; பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கப்பட்டது ஆங்கில ‘இந்து’. அதே நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தமிழ் பதிப்புக்கும் அதே மதப் பெயரை ஏன் சூட்ட வேண்டும்?

‘இந்து’ என்று பெயர்தாங்கியிருப்பதால்எப்படிஅதுஇந்துக்களுக்கானஏடுஎன்று கூற முடியாதோ,அதே போல் ‘திராவிட’ என்ற பெயர் கொண்டஇயக்கங்கள் ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களில் உரிமைகளுக்கானவை அல்ல; அக்கட்சிகளின் இயங்கு தளம் தமிழ்நாடுதான்!

நிமிர்வோம் ஏப்ரல் 2017 இதழ்

You may also like...