பெரியாரிஸ்ட் ஃபாரூக் படுகொலை
கோவை திராவிடர் விடுதலைக் கழக தோழர் ஃபாரூக் கடவுள் மதமறுப்பாளராக செயல்பட்டார் என்பதற்காகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் அதிர்ச்சியையும் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களையும் உருவாக்கிஇருக்கிறது; பெரியார் இயக்கத்துக்கும் -இஸ்லாமிய சமூகத்துக்கும் வரலாற்று ரீதியான உறவு தொடர்ந்து வருகிறது ; கடவுள் – மதமறுப்பாளர்களான பெரியார் இயக்க மேடைகளில்பேச அழைக்கப்படும் இஸ்லாமியர்கள்“ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் ” கடவுள் மறுப்பாளர்களுக்கும் சேர்த்து வணங்கித்தான் பேச்சைத் தொடங்கு வார்கள்; கருத்துச் சுதந்திரத்தை பெரியார் மேடைகள் அங்கீகரிக்கவே செய்கின்றன.
பார்ப்பனிய வர்ணாஸ்ரமக் கட்டமைப்புக்குள் இயங்கும் வேதமதமான இந்து மதம் -ஜாதி, தீண்டாமை அடையாளங்களை பிரிக்கமுடியாமல் -சதையும் நகமுமாக தன்னிடம் இணைத்துக் கொண்டிருக்கும், நிலையில் தீண்டாமையை மறுக்கும் மதமாக இஸ்லாம் மட்டுமே இருந்தது ; எனவேதான்பெரியார்ஒடுக்கப்பட்டசமூகத்தை தீண்டாமைக் கொடுமையிலிருந்து உடனடியாக விடுவித்துக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாக இஸ்லாமை பரிந்துரைத்தார் ; தீண்டாமை ஒழிப்பு என்ற ஒரு காரணத்தைத் தவிர , இஸ்லாம் மதத்தையே பெரியார் ஏற்றுக் கொண்டதாக ஒரு போதும் கூறவில்லை. இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து என்ற தலைப்பில் வெளிவந்த அவரது உரையிலேயே
(குடிஅரசு பதிப்பக வெளியீடு 1947)
“நான் இஸ்லாத்துக்கு ‘வக்காலத்துப்’ பேச வில்லை பிரச்சாரம் செய்யவில்லை. இது உண்மை!உண்மை!”என்றுதெளிவுபடுத்திவிட்டு “இந்து என்னும் பொல்லாத கொடுமையான கோரமான பாம்பை கொல்லுவதற்கு அல்லது அதன் விஷத்தன்மை பாதகத்திலிருந்து விலகு வதற்கு இதுதான் மருந்து” என்று தெளிவு படுத்தியிருக்கிறார். வேதமதமான பார்ப்பன இந்துத்துவம் இந்துமதத்தில் அடைக்கப் பட்டுள்ள வெகுமக்களான ‘சூத்திரர்’ பஞ் சமர்கள் உரிமைகளை பறித்தது போலவே தமிழ்நாட்டு இஸ்லாமியர்களும் -ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுபட ‘இஸ்லாம்’ ஆனவர்கள் அதனால்தான் இன்றுவரை -தமிழக கிராமப்பகுதிகளில் ‘இஸ்லாமானவர்’ என்ற சொல் வழக்கத்திலேயே இருக்கிறது ;
பார்ப்பனிய ஜாதி அமைப்புக்கு பலிகடாவான பார்ப்பனரல்லாத ‘இந்து’ தாழ்த்தப்பட்ட ‘இந்து’பிற்படுத்தப்பட்டஇஸ்லாமியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட அனைவரையும் ஓர் குடையின் கீழ் திரட்டி -அவர்கள் மீது திணிக்கப்பட்ட சமூகக் கொடுமைகள் பறிக்கப்பட்ட உரிமை களுக்காக போராடக்கிளம்பினார் பெரியார் ; இந்தப்பிரிவினர்அனைவரையும்இணைப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்த சொல் தான் “திராவிடர் ” இந்தப் போராட்டத்தின் முதன்மையான எதிரி வேத பார்ப்பனியத்தையும் அதன் சமூக ஒடுக்குமுறைகளையும் பண்பாட்டு அடிமைப்போக்குகளையும் பெரியார் இயக்கம் மக்கள்மன்றத்தில் பேச வேண்டியிருந்தது; இதை திசை திருப்ப – “இஸ்லாமியர்களை எதிர்க் கிறார்களா? கிறிஸ்தவர்களை எதிர்க்கிறார்களா?” என்ற கேள்வியை இந்துத்துவ சக்திகள்தொடர்ந்து எழுப்பி வருகின்றன; சமூகப்புரிதல் இல்லாத மக்களிடம் -இந்தக் கேள்விகளில் நியாயம் இருப்பது போன்ற தோற்றங்களையும் உருவாக்கி வருகிறது. இந்த திருத்தல் வாதங்களையும் எதிர்கொண்டு-சமூகப் பார்வையில் பெரியார் இஸ்லாமியர்களுக்கும் பெரியார் இயக்கத்துக் கிடையிலான உறவு சமூகரீதியானது தான்!இந்த உறவில் ‘விரிசலை’ உருவாக்கும் முயற்சிகள் வந்தால் பெரியார் இயக்கம் அவற்றை புறந்தள்ளி முன்னேறிச் செல்லும் இதுவே பெரியார் கொள்கை காட்டும் தெளிவான பாதை” இயக்கம் ‘இஸ்லாமியர்களை’ சமூக உறவுகளாகவே இணைத்துக் களப்பணியாற்றும் நிலையில் ஃபாரூக் படுகொலை பல்வேறு சிக்கல்களை உருவாக்கி யிருக்கிறது;
பெரியார் இயக்கம் இஸ்லாமியர்களை சமூகப் பார்வையுடன் அணுகியது ; காரணம் பெரியாரிஸ்டுகள் மதங்களை மறுப்பவர்கள் இறையியலாளர்கள் மதத்தை நம்பிக்கை மற்றும் மதத்தின் கோட்பாடுகள் வழியாகவே மதத்தை அடையாளப்படுத்துகிறார்கள்; சமூகவியலாளர் ஒரு சமூகத்தில் பதிந்து நிற்கும் வாழ்க்கைமுறை, அதன் வழியாக உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பு; அந்தக்கட்டமைப்பு உருவாக்கும் தாக்கங்கள் வழியாகவே பார்க்கிறார்கள்; இரண்டும் ஒரேசமுகத்தை நோக்கிய -வெவ்வேறு பட்ட பார்வை; பெரியார்இதேகருத்தை இப்படி கூறுகிறார். அதாவது நான் சொல்லும் மதம் கடவுளுக்கும் மக்களுக்கும் சம்பந்தமும், மோட்சமும் விதியும் மன்னிப்பும் சமாதானமும் மேலோகத்தில் அளிப்பது என்கிற மதமல்ல; மற்றது வென்றால், மனிதனுக்கு மரியாதையாய் (பணிவாய்) அன்பாய், பக்தியாய், சாந்தியாய், சகோதரத் தன்மையாய், ஒழுக்கமாய் உதவியாய் வாழும் கொள்கையை உங்களுக்குப் புரிவதற்காக மதம்என்றபழக்கமானவார்த்தையில்கூறுகிறேன். இதை ‘ சமுதாயக் கொள்கை’ என்று சொல்ல எனக்கு இஷ்டம் “.
இஸ்லாமியர்களுக்கும் பெரியார் இயக்கத்துக் கிடையிலான உறவு சமூக ரீதியானதுதான்! இந்த உறவில் ‘விரிசலை’ உருவாக்கும் முயற்சிகள் வந்தால்பெரியார் இயக்கம் அவற்றை புறந்தள்ளி முன்னேறிச் செல்லும் இதுவே பெரியார் கொள்கை காட்டும் தெளிவான பாதை” இந்தப் பின்னணியில் சமுக உறவு -மத உறவுகள் குறித்த சரியான புரிதல்களுக்காகவே இஸ்லாம் குறித்த பெரியார் கருத்துகள் இந்த இதழில் தொகுத்துத் தரப்பப்பட்டுள்ளது. பெரியாரின் இந்த கருத்துகள் இஸ்லாமியர் களிடையே – நபிகள் விழாவில் வெளிப் படுத்தியவை என்பதையும் குறிப்பிட வேண்டும். அந்த பாதையிலேயேபெரியார் இயக்கத்துக்கும் இடையிலான வரலாற்று உறவு பயணித்திருக்கிறது.
நிமிர்வோம் ஏப்ரல் 2017 இதழ்