ஒட்டப் பிடாரத்தில்

10.12.2011 அன்று மாலை 6 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் மரண தண்டனைக்கு எதிரான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்ட செயலாளர் கோ.அ.குமார், ம.தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் வீரபாண்டி செல்லச்சாமி, ம.தி.மு.க. மீனவரணியின் நக்கீரன் ஆகியோர் உரையாற்றினர். தலைமை செயற்குழு உறுப்பினர் பால். பிரபாகரன் விளக்கவுரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 05012012 இதழ்

 

You may also like...