சூலூர் தோழர்கள் தயாரித்துள்ள குறும்படம் ‘துக்கம்’
சூலூர் ஒன்றியக் கழகம் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் 24.12.2011 மாலை 6 மணியளவில் கண்ணம்பாளையம் தேர்நிலை திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் எழுதி இயக்கி நடித்த ‘துக்கம்’ குறும்படம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வெ.அ.நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். அ.ப.சிவா குறும்படத்தைப் பற்றி அறிமுகவுரையாற்றினார்.
குறும்படத்தை எழுத்தாளர் வே.மதிமாறன் வெளியிட தமிழ்நாடு மாணவர் கழகத்தினுடைய மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, கண்ணம்பாளையம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மௌனசாமி, 6வது வார்டு உறுப்பினர் இராமத்தாள் கணேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் நடுவில் ‘துக்கம்’ குறும்படம் திரையிடப்பட்டது.
பெரும்பாலான மக்கள் குறும்படத்தைப் பார்த்தனர். மேற்கு மண்டலத்தில் நிலவும் தீண்டாமையின் ஒரு வடிவத்தை சுட்டிக்காட்டும் இந்தப் படம் பொது மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தோழர்கள் கா.சு.நாகராசன், நீலவேந்தன், வே.மதிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் மா. பார்த்திபன் நன்றி கூறினார்.
தோழர்களின் கவனத்துக்கு….
தமிழர் விடுதலை இயக்கத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் நீலவேந்தன் எழுதிய ‘துக்க வீடு’ என்ற கவிதை, ‘வெண்மணி’ என்ற இதழில் வெளியானது. இக் கவிதை யின் தழுவலாக அ.ப.சிவா, ‘துக்கம்’ என்ற கதையை உருவாக்கி குறும்படமாக எடுக்க முடிவு செய்தார். இதில் சூலூர் வீரமணி, சூலூர் ஒன்றியக் கழகத் தோழர்கள் மற்றும் இராவத்தூர் பொது மக்கள் ஆகியோர் நடித்துள்ளனர். இராவத்தூரைக் கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. குறும்படத்தின் படத் தொகுப்பு – இசைக் கோர்வை கி. இளவரசன், ஒளிப்பதிவு பாண்டியராசன், இயக்கம் அ.ப. சிவா. இது முழுக்க முழுக்க சூலூர் ஒன்றியத் தோழர்கள் தயாரித்து இயக்கிய படமாகும். இப்படத்தை தோழர்கள் இணையத்தில் காண முகவரி : றறற/.லடிரவரநெ.உடிஅ/றயவஉh?எ=சட3ம9-3ழுன14
தோழர் அ.ப. சிவா, கருந்திணை இல்லம், 5/240 கிழக்கு அரசூர், அரசூர் அஞ்சல், கோவை – 641 407
ஏ. ஜோதி வேலு, எண்.1, வள்ளிய தெரு, பொறையாறு அஞ்சல், தரங்கம்பாடி வட்டம், நாகை-609 307.
பெரியார் முழக்கம் 12012012 இதழ்